ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான சிறப்பு ஆக்சஸெரீகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆக்சஸெரீகள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

அண்மையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350சிசி மற்றும் 500சிசி மாடல்களுக்கு விசேஷ அலாய் வீல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், தற்போது புதிய ஆக்சஸெரீகளும் வந்துள்ளன. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு புதிய விண்ட்ஷீல்டு கண்ணாடி அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

இதேபோன்று, கைப்பிடிகளுக்கான உறை உள்ளிட்டவை அடங்கிய விசேஷ கிட் ரூ.1,500 விலையில் கிடைக்கும். பெட்ரோல் டேங்க் மூடிக்கு விசேஷ கவர் ஒன்றும் வந்துள்ளது. இந்த கவர்கள்கருப்பு மற்றும் மெட்டாலிக் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இவை முறையே ரூ.775 மற்றும் ரூ.675 விலைகளில் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு வாட்டர் புரூஃப் தன்மை கொண்ட கவர்களும் வந்துள்ளன. கருப்பு வண்ண கவர் ரூ.900 என்ற விலையிலும், நீல வணண கவர் ரூ.975 விலையிலும் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

இதேபோன்று, வித்தியாசமான இருக்கைகள் மற்றும் இருக்கை கவர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு ரூ.1,800 முதல் ரூ.2,150 வரையிலான விலையில் கிடைக்கும். இருக்கை கவர்கள் ரூ.700 முதல் ரூ.850 வரையிலான விலையில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

மிலிட்டரி பேனியர் பேக் என்று குறிப்பிடும் பக்கவாட்டில் பொருத்துவதற்கான விசேஷ பைகளுக்கு ரூ.3,300 முதல் ரூ.5,500 வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த பைகளுக்கான மவுண்ட்டுகளுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் கேரியர்களுக்கு ரூ.2,450 முதல் ரூ.2,850 வரையிலான விலையில் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள்களுக்கு கிராஷ் கார்டுகளும் கிடைக்கிறது. இவை ரூ.2,200 முதல் ரூ.3,750 விலையில் கிடைக்கும். ஹெட்லைட் க்ரில் அமைப்பு ரூ.1,200 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு டீலர்களிலும், ராயல் என்ஃபீல்டு இணையதளத்தின் மூலமாகவும் இந்த எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீகளை தேர்வு செய்து வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2019, 17:59 [IST]
English summary
Indian motorcycle manufacturer Royal Enfield has revealed a host of new accessories for its Classic lineup of motorcycles. The motorcycle manufacturer which is best known for its retro-classic cruisers like the Classic 350 and 500 had earlier this month revealed a range of new alloy wheels for the two bikes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+