ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா பெராக் பைக்கிற்கு போட்டியாக தனது பைக்குகளில் பல அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிளாசிக் 350 மாடல் பைக்கை உரிமையாளர்கள் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து கொள்ளும் விதத்தில் சில பாகங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதன்படி, க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு 16 விதமான சைலென்சர்கள் உள்பட பல விசேஷ ஆக்சஸெரீகளை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தனக்கு விருப்பமான பாகங்களை கிளாசிக் 350 பைக்கின் உரிமையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த பாகங்களின் மொத்த விலை ரூ.39,675 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 தரத்திற்கு இணக்கமான கிளாசிக் 350 பைக்குகளை வைத்திருக்கும் அனைத்து உரிமையாளர்களும் இந்த பாகங்களை வாங்க தகுதி உடையவர்கள். அதேபோல் உமிழ்வு விதிக்கு மேம்படுத்தப்பட்ட பைக்குகளை வைத்திருப்போர் மட்டுமல்லாமல் மேம்படுத்தப்படாத பைக்குகளை வைத்திருப்போரும் இந்த பாகங்களை வாங்கலாம்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

எளிதில் வளையாத இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாகங்கள் வெறும் 40 யூனிட்கள் மட்டும் தான் உள்ளதாம். இந்த 16 பாகங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சைலன்ஸர் ரூ.3,600 விலையுடன் இரண்டு வருட உத்தரவாதத்தை பெறுகிறது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்ற பாகங்கள், பைக்கின் உடலமைப்பிற்கு, கண்ட்ரோல், எலக்ட்ரிக்கல், என்ஜின், லக்கேஜ், பாதுகாப்பு, இருக்கை, பராமரிப்பு மற்றும் சக்கரங்கள் போன்ற பகுதிகளில் கூடுதல் ஸ்டைலான தோற்றத்திற்காக பொருத்தும் வகையில் உள்ளது. இந்த சைலென்சர்கள் அரசின் விதிமுறைகளுக்கு இணையான தர அம்சங்களை பெற்றிருக்கிறது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ள பாகங்களும் அவற்றின் விலைகளும் வருமாறு: ஹெட்லைட் பாதுகாப்பு மூடி ரூ.250, நம்பர் போர்டு ரூ.1,850, எதிர் காற்றில் இருந்து பாதுகாக்க முன்புற கண்ணாடி அமைப்பு ரூ.4,000, வித்தியாசமான வடிவமைப்பில், என்ஜினை நீரில் இருந்து பாதுகாக்கும் தகடு ரூ.675, (அடுத்த ஸ்லைடில் பார்க்க)

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பொருட்களை எடுத்த செல்ல பயன்படக்கூடிய கூடை, வாகனத்தை ஓட்டும்போது கால் முட்டியால் டேங்கின் பெயிண்ட் பாதிப்படையாமல் தடுக்கும் கிட், லக்கேஜ் ராக், என்ஜின் கார்டு, டூரிங் இருக்கை போன்ற பாகங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.2,400, அலாய் வீல் கிட் ரூ.10,000 என மொத்தம் ரூ.39,675-க்கு பாகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி என்சிஆர், ஹைதராபாத், புனே என இந்தியா முழுவதும் உள்ள 141 ராயல் எண்ட்பீல்டு டீலர்ஷிப்களிலும் இந்த பாகங்கள் கிடைக்கும். இந்த பாகங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஒற்றை இருக்கையுடன் கூடிய கிளாசிக் 350 பைக்கையும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கூடுதலான 16 பாகங்களினால் கிளாசிக் 350 பைக்கின் பயணத்தில் சிறியளவிலாவது சவுகரியம் ஏற்படும் என்பது உறுதி. மேலும் இந்த பாகங்கள் பைக் வெற்றிடமாக உள்ளதே என நினைப்போருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2019, 18:19 [IST]
English summary
Royal Enfield 350 Classic Accessories Launched: 16 Exhausts, Touring Mirrors & More
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+