விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான மாடல் தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

Image Courtesy: Autocar India

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல் க்ளாசிக் 350. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனை ஜாவா பைக்குகளின் வரவால் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விலை குறைவான க்ளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்படும் க்ரோம் பூச்சுடைய அலங்கார பாகங்கள் நீக்கப்பட்டு கருப்பு வண்ண பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடலின் பெட்ரோல் டேங்கில் எளிமையான லோகோ பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்குகளில் கொடுக்கப்படும் டேங்க் க்ரிப்பும் நீக்கப்பட்டுவிட்டது.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

இந்த புதிய மாடலானது பியூர் பிளாக் மற்றும் மெர்குரி சில்வர் என்ற இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடலுக்கு ரூ.1.45 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

சாதாரண ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ள நிலையில், புதிய க்ளாசிக் 350 எஸ் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ரூ.1.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனைவிட ரூ.9,000 குறைவான விலையில் க்ளாசிக் 350 எஸ் மாடல் வந்துள்ளது.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடலைப் போன்றே, அண்மையில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மமற்றும் 350 இஎஸ் மோட்டார்சைக்கிள்களின் விலை குறைவான மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. க்ரோம் பாகங்களுக்கு பதிலாக கருப்பு வண்ணப் பூச்சுடைய பாகங்களை பயன்படுத்தி உள்ளனர்.

விலை குறைவான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எஸ் மாடல் தமிழகத்தில் அறிமுகம்!

குறைவான விலையில் வந்திருக்கும் புல்லட் மோட்டார்சைக்கிள்கள் புல்லட் 350 எக்ஸ் மற்றும் புல்லட் 350 எக்ஸ் இஎஸ் என்ற பெயரில் கிடைக்கின்றன. புல்லட் 350 எக்ஸ் மாடலுக்கு ரூ.1.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், புல்லட் 350 எக்ஸ் இஎஸ் மாடலுக்கு ரூ.1.21 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2019, 14:22 [IST]
English summary
Royal Enfield has launched a more affordable version of the popular Classic 350 motorcycle in the Indian market. The new Royal Enfield Classic 350 S is priced at Rs 1.45 lakh, ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+