ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களான இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக் மாடல்கள் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

அண்மையில் மாதத்திற்கு 2,000 என்ற அதிகபட்ச எண்ணிக்கையை தொட்டு இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்மாடல்களும் விற்பனையில் அசத்தியதுடன், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக, இன்டர்செப்டார் 650 மாடலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக கருதப்படும் இந்த 650 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

அதாவது, இந்த 650 சிசி மாடல்கள் வெறும் ரூ.2.50 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், அதிக மதிப்பு வாய்ந்த மாடல்களாக வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

இந்த நிலையில், இரு மாடல்களின் விலையையும் உயர்த்துவதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இரு மாடல்களின் விலையையும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலும் அதிகரிப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் தளத்தின் செய்தி கூறுகிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

வரும் செப்டம்பர் 1 முதல் விலை உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விலை உயர்வு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்த்தப்பட்டாலும், அது இந்த மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருத முடியும்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு மாடலிலும் ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 47 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

இரண்டு மாடல்களிலுமே முன்சக்கரத்தில் ட்வின் பிஸ்டன் பைப்ரே காலிபர்கள் கொண்ட 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு வசதியாக இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை உயருகிறது!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் ரூ.2.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் ரூ.2.66 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. செப்டம்பர் 1 முதல் விலையில் சிறிது ஏற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2019, 10:24 [IST]
English summary
According to media sources, Royal Enfield is planning to hike the prices of the Interceptor 650 as well as the Continental GT 650 in India soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+