உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் 650 ட்வின் பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. எவ்வளவு உயர்த்தியுள்ளது, எப்போதிலிருந்து உயர்கின்றது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த பைக்குகளாக கிளாசிக், புல்லட் உள்ளிட்ட மாடல்கள் இருக்கின்றன. தற்போது, இந்த வரிசையில் 650 ட்வின் மாடல் பைக்குகளான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகியவையும் இணைந்துள்ளன.

இந்த இரட்டையர்களை ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த வருடத்தின் நவம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

அறிமுகமாகி 7 மாதங்கள் கடந்த நிலையிலும், இந்த பைக்குகளின் மீதான மவுசு சற்றும் குறையாமல் நீடித்த வண்ணம் உள்ளது.

அதேசமயம், இந்திய வாகன சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் சூழ்நிலையிலும், ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகள் கணிசமான விற்பனை விகித்தத்தை பெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

அந்தவகையில், மாதத்திற்கு 2 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அதிகபட்ச எண்ணிக்கையிலான விற்பனையைப் பெற்று முக்கிய இந்த பைக்குகள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. மேலும், இந்த விற்பனை விகிதத்தால், அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டின் பைக்குகள் வரிசையில், ட்வின் 650 பைக்குகளும் புதிதாக இணைந்துள்ளது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

அதன் போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் களமிறங்கியதன் காரணமாகவே இத்தகைய சிறப்பை இந்த இரட்டையர்கள் பெற்றுள்ளனர்.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

அந்தவகையில், இந்த 650 சிசி திறன் கொண்ட இரட்டையர்களை ராயல் என்பீல்டு நிறுவனம், ரூ. 2.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறக்கியது. இந்த விலையில் அதிக திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் மாடலாக களமிறங்கியது அதுவே முதல் முறையாகும்.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

ஆகையால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக்குகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதிலும், மிக முக்கியமாக இன்டர்செப்டார் 650 மாடலுக்கு அமோக வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில், இவ்விரு மாடல்களின் விலையையும் ராயல் என்பீல்டு நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

புதிய விலையுயர்வாக 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ரூ. 2.50 லட்சம் என்ற விலையில் ரூ. 5,400 என்ற தொகையை ராயல் என்பீல்டு நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதனால், 650 ட்வின் பைக்குகளின் விலை ரூ. 2.65 லட்சம் என்ற விலையைப் பெற்றிருக்கின்றது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

இந்த புதிய விலை வருகின்ற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. ஆகையால், வருகின்ற 1ம் தேதி முதல் புக்கிங் செய்யப்படும் 650 ட்வின் பைக்குகள் இந்த புதிய விலையின் அடிப்படையிலேயே விற்பனைச் செய்யப்பட உள்ளது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

விலையுயர்வு மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகின்றது.

அதேசமயம், தற்போது வரை இந்த பைக்குளுக்கான காத்திருப்பு காலம் நீடித்த வண்ணம் உள்ளது. இவை, அறிமுகமாகி 7 மாதங்கள் கடந்தநிலையிலும் இத்தகைய சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த இரு பைக்குகளும் உருவத்தில் மாறுபட்டு காணப்பட்டாலும், ஒரே திறனிலான எஞ்ஜினைதான் பெற்றுள்ளன. அந்தவகையில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களிலும், ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டத்தினாலான 648 சிசி திறனை வெளிப்படுத்தும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

அது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இத்துடன், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இந்த ட்வின் பைக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயரும் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலை... எவ்வளவு, எப்போது தெரியுமா...?

மேலம், இரண்டு மாடல்களிலுக்கும் முன்சக்கரத்தில் ட்வின் பிஸ்டன் பைப்ரே காலிபர்கள் கொண்ட 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், முக்கிய பாதுகாப்பு அம்சமாக டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2019, 14:27 [IST]
English summary
Royal Enfield 650 Twin Bike Price Hiked. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+