சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்தான்... இவ்வாறு மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை, இளைஞர் ஒருவர் பெரும் பொருட் செலவில் க்ரூஸர் ரக பைக்காக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

மேற்கத்திய நாடுகளில் உள்ள காலச்சாரமான வாகன மாடிஃபிகேஷன், தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றது. இதனை உறுதி செய்யும் விதமாக அண்மைக்காலங்களாக வாகன உலகின் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது, வாகன சட்டத்தில் குற்றமாக பார்க்கப்படுகின்றது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இருப்பினும், பலர் அவர்களுக்கு பிடித்தமான வாகனங்களை விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் செய்து, பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர் ஒருவர், அவரது ஹிமாலயன் ஏடிவி மாடல் பைக்கை ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு இணையான தோற்றத்தில் மாடிஃபை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோவை வேம்ப்வீடியோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஏடிவி மாடல் மோட்டார்சைக்கிளை, க்ரூஸர் ரகத்திலான டூரிங் ஆஃப்ரோடு பைக்காக மாற்றும் பணியை டிஎன்டி மோட்டார்சைக்கிள் என்ற நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த நிறுவனம், ஹிமாலயன் பைக்கின் எஞ்ஜின் மற்றும் சில பாகங்களைத் தவிர மற்ற அனைத்து பாகங்களையும் மாற்றியமைத்துள்ளது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அந்தவகையில், ஹிமாலயன் பைக்கின் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட், ஃபென்டர், எக்சாஸ்ட் சிஸ்டம், வீல் போன்ற அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டு, கஸ்டமைஸ்ட் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏன்... ஹிமாலயன் பைக்கின் பாடி ஃபிரம்கள்கூட முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், இந்த பைக் பார்ப்பதற்கு ராயல் என்பீல்டின் ஹிமலாயன் ஏடிவி பைக் என்ற தோற்றத்தை இழைந்து, ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கைப் போன்ற காட்சியை வெளிப்படுத்துகின்றது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அதற்கேற்ப வகையில், ஹிமாலயன் பைக்கிற்கு பின்பக்கம் தாழ்வாகவும், முன் பகுதி சற்று தூக்கலாகவும் பாடி ஃபிரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிரேமில்தான் வாகன ஓட்டிக்கான சிங்கள் சீட் இருக்கை, பெட்ரோல் டேங்க் பைக்கின் எஞ்ஜின் உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், ஹிமாலயன் பைக்கிற்கு நீளமான வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், அதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

மேலம், பைக்கின் சிறப்பான லுக்கிற்காக, இருநிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. அதே கலர்தான் பைக்கின் வீல், பெட்ரோல் டேங்க், ஹெட்லைட், இருக்கை, ஃப்ரேம் உள்ளிட்டவற்றிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சுவாரஷ்யமாக இந்த பைக்கிற்கு ஹார்ட் லுக் டெயில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பின்பக்கத்திற்கான மோனோசாக் சஸ்பென்ஷன் நேரடியாக அதன் இருக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இத்துடன், பைக்கை கூடுதல் அழுகுபடுத்தும் விதமாக பைக்கிற்கு மரத்திலான இருக்கை, கஸ்டமைஸ்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், ஏப் ஹேண்டில் பார்கள், ப்யூவல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பகுதியில் நம்பர் பிளேட் உள்ளிட்டவை இருக்கின்றன. பைக்கை இவ்வாறு உருமாற்ற 5 முதல் 6 மாதங்கள் ஆனதாகவும், அதற்கு ரூ. 7 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கையால், ஹிமாலயன் பைக்கின் உண்மைத் தோற்றம் மாற்றப்பட்டு, ஹார்லி டேவிட்சன் பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு ஹிமலாயன் பைக்தான்... இதை இப்படி மாற்ற எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் மாடலை ஏபிஎஸ் வசதிகொண்ட மாடலாக தயார் செய்து வருகின்றது. இந்த புதிய வசதியினால் தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் பைக்கைக் காட்டிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொண்ட ஹிமலாயன் பைக் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் விலை உயர்வைப் பெற வாய்ப்பு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan Modified To Cruiser Bike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X