ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் நா ளை விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு ஹெல்மெட்டுகளின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் எங்கு வாங்குவது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் கோடுகள் விசேஷ நிபுணர்களை கொண்டு பெயிண்ட்டால் வரையப்படுகிறது. இந்த அற்புதமான கலை நுணுக்கத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக ராயல் என்ஃபீல்டு கடைபிடித்து வருகிறது. மெட்ராஸ் பின்ஸ்டிரிப் பாரம்பரியம் என்று இதனை பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த பாரம்பரியத்தின் உன்னதத்தை வாடிக்கையாளர்களுக்கு புதிய வடிவில் வழங்கும் முயற்சியாக கைகளால் விசேஷமான முறையில் பெயின்ட் செய்யப்பட்ட லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகளை ராயல் என்ஃபீல்டு நாளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக இந்த சிறப்புப் பதிப்பு ஹெல்மெட்டுகளை ஆர்டர் செய்து வாங்கலாம். மொத்தமாகவே 200 ஹெல்மெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் தனி வரிசை எண் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஹெல்மெட்டுகள் டெலிவிரி கொடுக்கப்படும். எனவே, இப்போதே ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்கள் முன்பதிவு செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

மெட்ராஸ் ஸ்ட்ரிப்ஸ் என்ற பெயரில் பெருமையுடன் குறிப்பிடப்படும் ஹெல்மெட்டுகள் மீதான பெயிண்ட் அலங்காரம் செய்யும் பணியை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குமார் பிரதர்ஸ் செய்து கொடுக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

பெரும்பாலான நிறுவனங்கள் ரோபோ எந்திரம் மூலமாக இந்த வேலைப்பாடுகளை செய்வதற்கு மாறிவிட்ட நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த கைகளால் பெயிண்ட் செய்து அலங்கரிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

MOST READ: பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

வெளிப்புறத்தில் கைகாள் பெயிண்ட் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கும் இந்த ஹெல்மெட்டுகள் தரத்திலும் சிறப்பானவையாக இருக்கும். இந்த ஹெல்மெட்டுகளுக்குள் நல்ல காற்றோட்டத்தை வழங்கும் அமைப்புடன், லெதர் பீடிங், தரமான கட்டமைப்புடன் இந்த ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

MOST READ: நடுரோட்டில் போட்டு பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

விலை விபரமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஓபன் ஃபேஸ் ஹெல்மெட் மாடலுக்கு ரூ.4,000 விலையும், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டிற்கு ரூ.5,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிடேட் எடிசன் ஹெல்மெட்டுகள் அறிமுகம்... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், வாகனங்கள் மற்றும் அதுதொடர்பான பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இந்த ஹெல்மெட்டுகள் சிறப்பானதாக இருக்கும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பு பொருட்கள் விற்பனைப் பிரிவு தலைவர் புனித் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Royal Enfiled has introduced limitid edition pinstripes helmets and it can be booked through online from tomorrow.
Story first published: Tuesday, December 3, 2019, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X