வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளின் குறைவான விலை மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் வருகையால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனையை பாதித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, குறைவான விலை மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் குறைவான விலையில் புல்லட் 350 எக்ஸ் என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அண்மையில் க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் க்ளாசிக் 350 எஸ் என்ற குறைவான விலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

இந்த மாடலுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அடுத்ததாக தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளிலும் குறைவான விலை மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எஸ் என்ற பெயரில் குறைவான விலை மாடலானது வர இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படும். சில க்ரோம் பாகங்கள் நீக்கப்பட்டு கருப்பு வண்ணத்திலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

தற்போது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள் ரூ.1.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. க்ளாசிக் 350 எஸ் போன்றே, தண்டர்பேர்டு 350 எஸ் மாடலும் ரூ,9,000 குறைவான விலையில் தண்டர்பேர்டு 350 எஸ் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிரது.

வருகிறது குறைவான விலை ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 !

இந்த நிலையில், விரைவில் அதிக மாற்றங்களுடன் புதிய தலைமுறை தண்டர்பேர்டு 350 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2019, 15:28 [IST]
English summary
According to media report, Royal Enfield is planning to launch cheaper variant of Thunderbird 350 motorcycle in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+