சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள்களான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகியவற்றின் சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம், ட்வின் மாடல் மோட்டார் சைக்கிள்களான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களையும் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்காக களமிறக்கியது.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

இந்த இரு மோட்டார் சைக்கிள்களும், மலிவான விலையில் கிடைக்கும் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் என்பதால், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும், பைக்குகளுக்கான டிமாண்ட் அதிகளவில் நிலவி வருகின்றது. அந்தவகையில், ட்வின் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 4 முதல் 6 மாதங்களாக நிலவி வருகின்றது. இது சில மாநிலங்களில் கூடுதலாகவும் காணப்படுகிறது.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

இந்நிலையில், இந்த ட்வின் மாடல் மோட்டார் சைக்கிளின் சஸ்பென்ஷனை, ராயல் என்பீல்டு நிறுவனம் இலவசமாக மாற்றி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கார்டாக் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அழைப்பு எதையும் ராயல் என்பீல்டு நிறுவனம் இதுவரை அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

இந்த புதிய தகவலின்படி, ராயல் என்பீல்டு நிறுவனம், ரப்பர் ஸ்டாப்பர் கொண்ட புதிய சஸ்பென்ஷனைப் பொருத்த இருக்கின்றது. இந்த ரப்பர் ஸ்டாப்பர் தற்போதைய சஸ்பென்ஷன் அமைப்பில் பொருத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

ரப்பர் ஸ்டாப்பர்கள், மோட்டார் சைக்கிள் பள்ளம் மற்றும் மேடுகள் என கரடு முரடான சாலையில் செல்லும்போது, சஸ்பென்ஷனை ஸ்மூத்தாக இயங்க வைக்க உதவும். அதேபோன்று, உராய்வினால் எளிதில் சஸ்பென்ஷன் பாதிப்படைவதையும் தடுக்கும்.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம், கான்டினென்டல் ஜிடி 650 மாடல் மோட்டார் சைக்கிளை கஃபே ரேஸர் ஸ்டைலிலும், இன்டர்செப்டார் 650 மாடல் மோட்டார் சைக்கிளை பழைய க்ரூஸர் ஸ்டைலிலும் தயாரித்துள்ளது. இதில், இன்டர்செப்டார் 650 ரூ. 2.35 லட்சத்திற்கும், கான்டினென்டல் ஜிடி 650 ரூ. 2.49 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை, சுமார் 6 மாதங்களுக்குள்ளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகியிருப்பதாக கூறப்படுகிறது. ராயல் என்பீல்டின் இந்த ட்வின் மோட்டார்சைக்கிள் உருவத்தில் மாறுபட்டு காணப்பட்டாலும், ஒரே பவரைக் கொண்ட எஞ்ஜின்கள்தான் பொருத்தப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுக்கும் ராயல் என்பீல்டு: எதற்காக தெரியுமா?

அந்தவகையில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர்கள் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 13, 2019, 17:03 [IST]
English summary
Royal Enfield Upgrading 650 Twins Rear Suspension — Get Your Upgrade Now. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+