கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-9 மாடல் பைக்குகளின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அதன் முழுவிவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்ட லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது கிளாசிக் 350. இந்த பைக் கடந்த மாதத்தில் மட்டும் 23,433 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் இது 2018 ஆகஸ்ட் மாதத்தை விட குறைவு தான். ஏனெனில் கிளாசிக் 350 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 44,610 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. இதனால் இப்பைக்கின் விற்பனை சதவீதம் 2018 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 47.47 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

இதில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு மாடல் புல்லட் 350. கடந்த மாதத்தில் 11,824 யூனிட்கள் விற்பனையான இந்த பைக் 2018 ஆகஸ்ட் மாதத்தை விட 10% கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

முதல் இரு இடங்களை பிடித்த கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350யின் அடுத்த வெர்சன்களாக கிளாசிக் 350s, புல்லட் 350X மாடல்கள் லேட்டஸ்ட்டாக மிக குறைந்த விலைகளில் வெளியாகியிருந்தன. இந்த விலை குறைப்பும் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350யின் அதிக விற்பனைக்கு காரணமாக அமைந்தது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரா 350 பெற்றுள்ளது. இந்த மாடலின் 5000 யூனிட்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் அபரிதமான வளர்ச்சியே ஆகும். வெறும் 2,484 யூனிட்களை மட்டுமே விற்பனையான 2018 ஆகஸ்ட்டுடன் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இது 101% விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 இந்த வரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 3,843 யூனிட்கள் விற்பனையானபோதிலும் இந்த மாடல் 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 48 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் தண்டர்பேர்டு350, 7422 யூனிட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த மாடலின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன் முழு தகவல் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

ஐந்தாம் இடத்தை இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 என்ற ராயல் என்ஃபீல்டு ட்வின் மாடல்கள் பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,172 யூனிட்கள் விற்பனையான இந்த 650cc மாடல்கள் தான் இந்தியாவில் விற்பனையான 650cc பைக்குகளில் முன்னிலையில் இருக்கும் மாடல்கள் ஆகும். இந்த மாடல் பைக்குகள் கடந்த 10 மாதங்களில் 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி சமீபத்தில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

இதற்கு அடுத்த 4 இடங்களை ராயல் எண்ட்பீல்ட்டின் 500cc பைக்குகள் தொடர்ச்சியாக பெற்றுள்ளன. அதன்படி 6-வது இடத்தை 1,653 யூனிட்கள் விற்பனையாகி ஹிமாலயன் 500cc மாடல் பைக்கும், 7-வது, 8-வது, 9-வது இடங்களை முறையே கிளாசிக், தண்டர்பேர்டு, புல்லட் மாடல்களின் 500cc வெர்சன்களான கிளாசிக் 350, தண்டர்பேர்டு 350, புல்லட் 350 பைக்குகள் பெற்றுள்ளன.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு மாடல்கள் எவை? டாப்-9 லிஸ்ட் இதோ

இந்திய மார்கெட்டில் எப்போதும் தனி அடையாளமாக திகழும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கடந்த மாத விற்பனையில் முதலிடத்தை பிடித்த கிளாசிக் 350 மற்ற அனைத்து மாடல்களையும் விட தொடர்ந்து விற்பனையின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2019, 13:23 [IST]
English summary
Royal Enfield Model-Wise Sales In India For August: Classic & Bullet 350 Are The Top-Selling ModelsRead more at: https://www.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-model-wise-sales-india-august-classic-bullet-350-top-selling-models-report-029477.html
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+