விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் கெத்து காட்டி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

மைலேஜ் மற்றும் விலையை பார்த்து இந்திய வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிள்களை வாங்கிய காலம் எல்லாம் மலையேறி விட்டது. தற்போது மோட்டார்சைக்கிள்களின் பெர்ஃபார்மென்ஸ் என்ற விஷயத்திற்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 600 சிசி - 1000 சிசி செக்மெண்ட்டிலும், கணிசமான எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகின்றன.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

குறிப்பாக ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் எனப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களின் வருகைக்கு பிறகு, இந்த செக்மெண்ட் எழுச்சி கண்டுள்ளது. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்கள் ஓரளவிற்கு மலிவான விலையில் கிடைப்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவின் 600 சிசி -1000 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், எதிர்பார்த்தது போல, ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக விற்பனையான ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 1,700.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

இந்த செக்மெண்ட்டில் வேறு எந்த மோட்டார்சைக்கிளும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்கள் 4 இலக்க எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. ஆனால் இந்த பட்டியலில் உள்ள வேறு எந்த மோட்டார்சைக்கிளும் மூன்று இலக்கத்தை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

இதனிடையே இந்த பட்டியலில் கவாஸாகி இஸட்900 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 80 கவாஸாகி இஸட்900 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது இடம் கவாஸாகி நின்ஜா 1000 மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் 71 கவாஸாகி நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

58 யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையுடன் நான்காவது இடம் பிடித்துள்ள ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 கம்பேக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். நடப்பு மாதத்தில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள் இன்னும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த பட்டியலில் 5வது இடத்தை கவாஸாகி வெர்ஸிஸ் 1000 மோட்டார்சைக்கிள் பிடித்துள்ளது. மொத்தம் 35 யூனிட் கவாஸாகி வெர்ஸிஸ் 1000 பைக் விற்பனையாகியுள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

6வது இடத்தை 30 யூனிட்களுடன் கவாஸாகி நின்ஜா 650 மோட்டார்சைக்கிளும், 7வது இடத்தை 27 யூனிட்களுடன் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிளும் பிடித்துள்ளன. 8வது இடத்தை கவாஸாகி வெர்ஸிஸ் 650 பிடித்துள்ளது. மொத்தம் 23 கவாஸாகி வெர்ஸிஸ் 650 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 9வது இடத்தை 20 யூனிட்களுடன் கவாஸாகி இஸட்650 பிடித்துள்ளது. 10வது மற்றும் கடைசி இடத்தில் ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883 உள்ளது. மொத்தம் 19 ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

அதிகம் விற்பனையான டாப்-10 600 சிசி - 1000 சிசி மோட்டார்சைக்கிள்கள் (மார்ச் 2019)

1. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் - 1,700 யூனிட்கள்

2. கவாஸாகி இஸட்900 - 80 யூனிட்கள்

3. கவாஸாகி நின்ஜா 1000 - 71 யூனிட்கள்

4. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 - 58 யூனிட்கள்

5. கவாஸாகி வெர்ஸிஸ் 1000 - 35 யூனிட்கள்

6. கவாஸாகி நின்ஜா 650 - 30 யூனிட்கள்

7. டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் - 27 யூனிட்கள்

8. கவாஸாகி வெர்ஸிஸ் 650 - 23 யூனிட்கள்

9. கவாஸாகி இஸட்650 - 20 யூனிட்கள்

10. ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883 - 19 யூனிட்கள்

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களை தவிர்த்து விட்டு பார்த்தால், இந்த பட்டியலில் கவாஸாகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துவது தெளிவாகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்! முழுமையாக ஆதிக்கம் செலுத்த காரணம் இதுதான்

மேற்கண்ட 10 மோட்டார்சைக்கிள்களை தவிர இந்தியாவின் 600 சிசி - 100 சிசி செக்மெண்ட்டில் கிடைக்கும் எஞ்சிய மாடல்களின் விற்பனை நிலவரத்தை கீழே வழங்கியுள்ளோம். இதில், ஒரு யூனிட் கூட விற்பனையாகாத மாடல்கள் சேர்க்கப்படவில்லை.

1. கவாஸாகி வல்கான் எஸ் - 16 யூனிட்கள்

2. டிரையம்ப் டைகர் 800 - 15 யூனிட்கள்

3. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் - 14 யூனிட்கள்

4. கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-6ஆர் - 12 யூனிட்கள்

5. சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி - 10 யூனிட்கள்

6. டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் - 8 யூனிட்கள்

7. டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் - 3 யூனிட்கள்

8. டிரையம்ப் போனிவில் டி100 - 3 யூனிட்கள்

9. கவாஸாகி நின்ஜா எச்2 - 2 யூனிட்கள்

10. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 - 1 யூனிட்

Most Read Articles
English summary
Sales Report: Best-Selling 600cc - 1000cc Motorcycles In March 2019 In India - RE 650 Twins Tops the List. Read in Tamil
Story first published: Saturday, April 27, 2019, 21:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X