Just In
- 1 hr ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago
10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...
- 1 hr ago
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!
- 4 hrs ago
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்
Don't Miss!
- News
கொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ
- Movies
அடேங்கப்பா... சாதித்தது ரவுடி பேபி: இந்திய அளவில் பர்ஸ்ட், உலகளவில் 7-வது இடம்!
- Finance
ச்ச... இத்தனை ஆயிரம் பாலியல் புகார்களா..? அதுவும் உலக புகழ் பெற்ற இந்த கம்பெனியிலா..?
- Technology
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- Sports
ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Lifestyle
உடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிவேகம் எப்போதுமே ஆபத்துதான்.. காருக்கு மிக நெருக்கமாக சென்ற கேடிஎம் ஆர்சி பைக்கின் திக்திக் காட்சி
அதேவேக பயணம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை விளக்கும்வகையில் ஓர் புதிய வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சிகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிவேகம் எப்போதுமே ஆபத்துதான் என்பதை விளக்கும் வகையில் இணையத்தில் பல வீடியோக்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. அதன் வரிசையில் புதிய வீடியோ ஒன்று இணைந்துள்ளது. பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோவை ரெஃபி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

பொதுவாக இந்தியாவில் உள்ள பல சாலைகள் பெரும் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேசமயம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தினாலும், விபத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டி வருகின்றன.

இதனை வெளிப்படுத்தும் வகையில், தற்போதைய வீடியோ அமைந்துள்ளது. வீடியோவில் இளைஞர் ஒருவர் கேடிஎம் ஆர்சி மாடல் பைக்கில் அதிகவேகமாக செல்கின்றார். அவர் வேகமாக செல்வது மட்டுமின்றி, அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக, தவறான பாதையில் ஏறிச் செல்கின்றார்.

தொடர்ச்சியாக இவ்வாறே, விதிமுறை மீறலில் ஈடுபடும் அவர், இறுதியாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை ஓவர்டேக் செய்கின்றார். அப்போதுதான், அந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறுகின்றது. ஆனால், இந்த சம்பவத்தில், இருசக்கர வாகன ஓட்டி தக்க நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதால், விபத்தில் சிக்காமல் தப்பித்தார்.

இந்த சம்பவத்திற்கு இருசக்கர வாகன ஓட்டி மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. ஏனென்றால், பைக்கரைப் போன்றே, அந்த ஸ்விஃப்ட் காரின் ஓட்டுநரும், அதற்கு முன்னாடிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். அவ்வாறு, பேருந்தை ஓவர்டேக் செய்யும்போதுதான் இத்தகைய சம்பவம் அரங்கேறியது.
ஆகையால், இந்த சம்பவத்திற்கு இருவருமே முழு காரணமாக இருக்கின்றனர். அதேசமயம், இருசக்கர வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தமான ஓட்டும் திறனால், இந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கார் ஓட்டுநரோ அல்லது பைக்கரோ சிறு பிழை செய்திருந்தால்கூட, அது மிகப் பெரிய பின்விளைவுகளை இருவருக்கும் ஏற்படுத்தியிருக்கும்.

இதுபோன்ற, காரணங்களாலேயே அதிவேகம் எப்போதும் ஆபத்தானது எனக் கூறப்படுகின்றது. அதேசமயம், தற்போது, இந்த பைக் மற்றும் ஸ்விப்ட், ஆகிய இருவாகனங்களின் ஓட்டுநர் மேற்கொண்டிருக்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக அண்மைக் காலங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், முன்னதாக விதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகையை அதிகபட்சமாக 10 மடங்கு உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதசமயம், சில மாநிலங்களும் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக இரும்பு கரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில், அண்மையில் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் 14வது சிறப்பு நீதிமன்றம், இதேபோன்று, தவறான பாதையில் சென்ற ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 அபராதம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற விதிமீறல்களுக்கு மோட்டார் வாகன சட்டம், 119 மற்றும் 177-ன் பிரிவுகளின் கீழ் ரூ. 1,100 அபராதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை வாகன ஓட்டிகள் மத்தியில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில், ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியது.

இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு தற்போது நடைபெற்ற இந்த சம்பவமே மிகப்பெரிய உதாரணமாக இருக்கின்றது.
ஏனெனில், கேடிஎம் ஆர்சி பைக்கின் ஓட்டுநரும்சரி, ஸ்விப்ட் காரின் ஓட்டுநரும் சரி, இரு வாகன ஓட்டிகளும் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவில்லை. மேலும், கார் ஓட்டுநர் முறையாக ஓஆர்விஎம் கண்ணாடியை பார்க்காமல் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதன் காரணமாகவே, இத்தகைய சூழல் நிலவியது.

மேலும், வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும்போது, மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆகையால், சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும், எந்தவொரு செயலுக்கும் முன்பாக, அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது. இது, சக வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி அவர்களுக்கும் நன்மையை விளைவிக்கும்.