இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

குழுந்தைகள் மற்றும் சிறுவர்கள் வரை சுலபமாக சைக்கிளை இயக்குவதற்கு பழகும் வகையிலான பைக்குகளைத் தயாரித்து வரும் ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், குழுந்தைகள் மற்றும் சிறுவர்கள் சுலபமாக சைக்கிளை இயக்குவதற்கு பழகும் வகையிலான மாடல் சைக்கிளைத் தயாரித்து உலக நாடுகள் முழுவதும் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

இந்த சைக்கிள்கள் குழந்தைகள், சைக்கிள் ஓட்ட பழகுவம் போது தடுமாறி கீழே விழாத வண்ண் தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சைக்கிள் குழந்தைகள் தன்னிச்சையாக, பெற்றோர்களின் உதவியின்றி இயக்கும் வகையிலான அமைப்பினைப் பெற்றுல்ளது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

இத்துடன், இந்த நிறுவனம் குழந்தைகள் நடை பயில்வதற்கு ஏற்பவும் வாகனங்களைத் தயாரித்து வருகின்றது. ஏற்கனவே உலக நாடுகள் முழுவதும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது, அதன் ஆதிக்கத்தை இந்தியாவில் செலுத்தும் விதமான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான மோட்டராய்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப சைக்கிள்களைத் தயாரித்து வரும் இந்த ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ஆறு மாத குழந்தைகள்கூட இயக்கும் வகையிலான பிரீமியம் தரத்திலான ட்யூரபிள் பேலன்ஸ் பைக்குகளைத் தயாரித்து வருகின்றது. இதன் காரணமாகவே, இந்த நிறுவனத்தின் சிறுவர்களுக்கான வாகனங்கள் உலகளவில் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

இந்நிலையில், இந்த நிறுவனம் அமேசான் உள்ளிட்ட சில இ-வர்த்தகம் மூலம் இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இதற்காக இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் ரீடெய்லர்களை நிறுவவும் அந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், அந்த நாட்டின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள ரேபிட் சிட்டியில், அதன் தலைமை செயலகத்தை நிறுவி உள்ளது. இந்த நிறுவனத்தை ரையன் மெக்ஃபேர்லேண்ட் (Ryan McFarland) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியுள்ளார்.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

இவர், ஒரு நாள் அவரது 2 வயது மகனுக்கு நடை பயல கற்றுக்கொடுக்கும் வந்த யோசனையைக் கொண்டு, முதலில் அவரது மகனுக்காக நடை பயிலும் சைக்கிளைத் தயாரித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அதையே லாபகரமாக செயல்படுத்தும் வகையில், வர்த்தக ரீதியிலாக நிறுவனம் ஒன்றை அமைத்து முதலில் அமெரிக்காவில் மட்டும் விற்பனைச் செய்துள்ளார்.

இந்தியச் சந்தையில் கால் தடம் பதிக்கும் பிரபல ஸ்டிரைடர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

காலப்போக்கில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனைச் செய்யும் வகையில் அவர் முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக, இதுவரை 75 நாடுகளுக்கும் மேலாக, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அந்த நிறுவனம் விற்பனைச் செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Strider Sports Entry into The Indian Market. Read In Tamil.
Story first published: Thursday, May 9, 2019, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X