இந்தியாவில் இவர்களுக்கு தனிப்பாதை!!!

இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு தனிப்பாதை அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

சில வருடங்களுக்கு முன்புவரை சைக்கிள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது. கிராமம் நகரம் என வேறுபாடுகளின்றி அனைவரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள்.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

நாகரிக வளர்ச்சியில் பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, மக்களிடம் சைக்கிள் பயன்பாடும் வெகுவாகக் குறைந்து விட்டது.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியுள்ளது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது நமது உடல்.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் வேறு வதைக்க, பலர் சைக்கிளில் அலுவலகம் செல்லத் தொடங்கியுள்ளனர். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் பைக் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

இந்நிலையில் சூற்றுச்சூழலின் நன்மைகளை ஊக்குவிக்கும் விதமாக டெரி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு தனிப்பாதை அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என கூறினார்.

இந்தியாவில் இவர்களுக்கு இனி தனிப்பாதை!!!

சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும். பெரும்நகரங்களில் சூற்றுச்சூழல் மாசுபாடு மக்களின் உடல் ஆரோக்கியம் பெரும்பாதிப்படைவதை தடுக்கும் வகையில். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு தனிப்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தும் என அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

Most Read Articles
English summary
Suresh Prabhu pitches for special cycle lanes in cities: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X