புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டருக்கு போட்டியாக, சுஸுகி நிறுவனம், அதன் அக்செஸ் 125 மாடலை தயார் செய்துள்ளது. இந்நிலையில், புதிய அப்டேடட் அக்செஸ் ஸ்கூட்டரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக அக்செஸ் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலும் இது முக்கிய இடத்தில் இருக்கின்றது.

அந்தவகையில், பிரபல ஹோண்டா நிறுவனத்தின் முன்னணி ஸ்கூட்டரான ஆக்டிவாவிற்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் களமிறக்கப்பட்டது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

ஆகையால் சுஸுகி நிறுவனம், அதன் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் அந்த ஸ்கூட்டருக்கு ஸ்பெஷல் அப்டேட்டினை வழங்கி வருகின்றது.

அந்தவகையில், புதிய அப்டேட்டினைப் பெற்ற சுஸுகி அக்செஸ் 125 மாடல் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை பைக்அட்வைஸ்.இன் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பை படங்களை நீங்கள் கீழே காணலாம்.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

சுஸுகி நிறுவனம் அக்செஸ் மாடல் ஸ்கூட்டரை முதல் முறையாக 2007ம் ஆண்டில்தான் அறிமுகம் செய்திருந்தது. இதன் பிரத்யேக லுக் மற்றும் வசதியின் காரணமாக இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன்காரணமாகவும், இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

அந்தவகையில், சஸுகி அக்செஸ் 125 மாடல் ஸ்கூட்டருக்கு புதிய காஸ்மெடிக் மாற்றம் மற்றும் சில அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு, சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர், மேட் ஃபினிஸிங்கிலான சிவப்பு நிறத்தில் வெளிவர உள்ளது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் ஏற்கனவே, மெட்டாலிக் மேட் பிளாக், பியர்ல் மிரேஜ் வெள்ளை மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், புதிய மேட் ஃபினிஸிங்கிலான சிவப்பு நிறம் கொண்ட அக்செஸ் ஸ்கூட்டரும் இந்த வரிசையில் இணைய இருக்கின்றது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

இந்த ஸ்கூட்டரின், ஃபுட் போர்ட் மற்றும் உள்பக்க பாடியின் நிறம் பீச் நிறத்திலும், அதன் வீல் மேட் பிளாக் நிறத்திலும் காணப்படுகின்றது. அதேபோன்று, அதன் கண்ணாடி மற்றும் ஹெட்லைட் பகுதியில் குரோம் பூச்சிலான ஹைலைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், அதன் இருக்கையில் ஸ்பெஷல் எடிசன் முத்திரையிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

புதிய நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர் லிமிடெட் எடிசன் மாடல் என்று கூறப்படுகின்றது. ஆகையால், இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்டு வேரியண்டு அக்செஸைக் காட்டிலும் சற்று விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

ரெகுலர் சுஸுகி அக்செஸ் வேரியண்டின் விலை ரூ. 60,188 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்தவிலையில், ரூ 1,600 உயர்வைப் பெற்று ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

புதிய அப்டேட் அக்செஸ் ஸ்கூட்டரில் காஸ்மெடிக் மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், முன்னதாக காணப்பட்ட அதே 124சிசி திறன் கொண்ட சிங்கிள்-சிலிண்டர் எஞ்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

இந்த எஞ்ஜின் சிவிடி டிரான்ஸ்மிஷனில் இயங்கும் தன்மைக் கொண்டது. மேலும், இது கார்புரேட்டர் ப்யூவல் சிஸ்டத்தையும் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் ப்யூவல் டேங்க் 5.6 லிட்டர் பெட்ரோலைப் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு கொள்ளளவைப் பெற்றிருக்கின்றது. ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக, அதன் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்டுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலாக களமிறங்கும் சுஸுகி அக்செஸ்... ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டி இதுதான்...

மேலும், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக அதன் முன் புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பர் கொண்ட மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Suzuki Access 125 Special Edition in Matte Red Spotted. Read In Tamil.
Story first published: Friday, July 12, 2019, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X