அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுகம்!
கவர்ச்சிகரமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் முதல் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலாக சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான டிசைனிலிருந்து மாறுபட்ட இதன் பிரம்மாண்டமான முகப்பு தோற்றம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு செய்வதை கொண்டாடும் விதத்தில், ஸ்பெஷலான வண்ணத் தேர்வில் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் தற்போது மெட்டாலிக் மேட் ஃபைப்ராயின் க்ரே, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வண்ணத் தேர்வை வழங்கும் விதத்தில் புதிய மேட் பிளாக் என்ற வண்ணத்திலும் வந்துள்ளது.

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த கருப்பு வண்ணம் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் முரட்டுத்தனமான தோற்றத்தை தருகிறது. புதிய வண்ணம் உள்பட அனைத்து வண்ணத் தேர்வுகளுக்கும் ரூ.69,208 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணத் தேர்வு தவிர்த்து எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்கூட்டரில் 124 சி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எஸ்இபி தொழில்நுட்பத்துடன் வரும் இதன் எஞ்சின் செயல்திறனிலும், மைலேஜிலும் சிறப்பாக பெயர் பெற்றுள்ளது.

சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. வசதியான ஃபுட்ஃபோர்டு மற்றும் அகலமான இருக்கையும் சிறப்பான ஓட்டுதல் மற்றும் பயண அனுபவத்தை வழங்கும்.

பாடி மவுண்ட் விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு, யுஎஸ்பி சார்ஜர், ஸ்டோரேஜ் வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், சேஃப்டி ஷட்டர் மற்றும் புஷ் ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன. மொத்தத்தில் 125 சிசி செக்மென்ட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








