மகன் பிறந்தநாளுக்காக பிரம்மாண்டம்... தந்தை வழங்கிய பரிசின் விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்
மகன் பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பிரம்மாண்டம் காட்டியுள்ளார். அவர் வழங்கிய பரிசின் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் மலைத்து போவது உறுதி.

உலகில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்று சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa). இந்தியாவிலும் சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் ஸ்போர்ட்ஸ்-டூரர் பைக்கான சுஸுகி ஹயபுசாவின் விலை மிகவும் அதிகம். எனவே விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஹயபுசா பைக்கை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகளை சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஆனால் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டாலும் கூட, சுஸுகி ஹயபுசா பைக்கின் விலை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் சுஸுகி ஹயபுசா பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவை, இந்திய இளைஞர்கள் பலரால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பைக், உங்கள் தந்தையிடம் இருந்து பரிசாக கிடைத்தால் எப்படி இருக்கும்? குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் தாக்கூர் என்பவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

கவுரவ் தாக்கூரின் பிறந்தநாளை முன்னிட்டு, சுஸுகி ஹயபுசா பைக்கை அவரது தந்தை பரிசாக வழங்கியுள்ளார். இது வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. கவுரவ் தாக்கூரின் குடும்பத்தினர், சுஸுகி ஷோரூமிற்கு ஒட்டுமொத்தமாக சென்று ஹயபுசா பைக்கை டெலிவரி எடுத்து வந்துள்ளனர். அப்போது கவுரவ் தாக்கூரின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற பைக்காக சுஸுகி ஹயபுசா திகழ்கிறது. எவ்வளவு நேரம் ஓட்டினாலும் சலுப்பு தட்டாது. சௌகரியமாக பயணிக்கலாம். சுஸூகி ஹயபுசா பைக்கில், இன்லைன் 4-சிலிண்டர், லிக்யூட் கூல்டு, 1,340 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜினான இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்மில் 200 பிஎச்பி பவரையும், 7,200 ஆர்பிஎம்மில் 155 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை மிக்கது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை இது பெற்றுள்ளது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-1000ஆர் (Suzuki GSX-1000R) மற்றும் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-10ஆர் (Kawasaki Ninja ZX-10R) உள்ளிட்ட சூப்பர் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவான ஆர்பிஎம்மில் அதிக டார்க்கை உருவாக்கும் திறன் சுஸுகி ஹயபுசாவிற்கு உள்ளது. சுஸுகி ஹயபுசா பைக்கின் சக்தி வாய்ந்த மிகப்பெரிய இன்ஜினே இதற்கு காரணம். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.0 வினாடிகளிலும், மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.5 வினாடிகளிலும் எட்டி விடும் ஆற்றல் சுஸுகி ஹயபுசாவிற்கு உள்ளது.

சுஸுகி ஹயபுசா பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடை எட்ட சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு சுமார் 25.4 வினாடிகள் போதுமானது. இதன் முன்பகுதியில் ட்யூயல் டிஸ்க் பிரேக்குகளும், பின்பகுதியில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

பலம்பொருந்திய சுஸுகி ஹயபுசா பைக்கின் எடை 268 கிலோ. ஆனால் வளைவுகளில் அதிவேகத்தில் திரும்பும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சிட்டி ரைடிங் மற்றும் டிராக் ரைடிங் என வெவ்வேறு வித்தியாசமான சூழ்நிலைகளில் ஓட்டுவதற்காக, மூன்று வித்தியாசமான மோட்களை (Modes) சுஸுகி ஹயபுசா பைக் வழங்குகிறது.

இதனிடையே தந்தையிடம் இருந்து பிறந்தநாள் பரிசாக சுஸுகி ஹயபுசா பைக்கை பெற்ற கவுரவ் தாக்கூர், இதற்கு முன்னதாக பஜாஜ் பல்சர் 220எப் (Bajaj Pulsar 220F) பைக்கை பயன்படுத்தி வந்தார். இதுவும் இந்தியாவில் புகழ்பெற்ற பைக்குகளில் ஒன்றுதான் என்றாலும் தற்போது 13.74 லட்ச ரூபாய் விலை கொண்ட சுஸுகி ஹயபுசா பைக்கை ஓட்டி வருகிறார் கவுரவ் தாக்கூர். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் அதிகரிக்கும். இதனிடையே சுஸுகி ஷோரூமில் இருந்து கவுரவ் தாக்கூர் குடும்பத்தினர் பைக்கை டெலிவரி எடுத்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஓஆர்விஎம் (ORVM) மற்றும் வைசர் (Visor) உள்ளிட்ட பாகங்கள் பொருத்தப்படுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இவ்வளவு விலை உயர்ந்த பரிசளிக்கும் தந்தை கிடைக்க கவுரவ் தாக்கூர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications