பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

சுஸுகி நிறுவனத்தின் பவர்ஃபுல்லான பைக்காக இருக்கும் ஹயபுசாவை வைத்து, இந்திய இளைஞர் ஒருவர் பாப்கார்ன் தயாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை இந்த பதிவில் காணலாம்.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

சுஸுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடல் பைக்காக ஹயபுசா இருந்து வருகிறது. அதீத சக்திக் கொண்ட இந்த பைக்கிற்கு, 'தூம்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் மிகப்பெரிய ரோல் வழங்கப்பட்டிருந்தது. அந்த படத்தில், கருப்பு நிற ஹயபுசா பைக்கினை, கதா நாயகன் ஜான் ஆபிரகாம் பயன்படுத்துவார். இத்துடன் மேலும் சில ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்குகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தன.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

பெரும்பாலும், இதுபோன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை, போட்டியில் ஈடுபடுத்த மற்றும் அதீத சக்தியை வெளிப்படுத்தவே பலர் பயன்படுத்துகின்றனர். அதைத்தான் நாம் இத்தனைக் காலங்களாக பார்த்து வந்தோம். ஆனால், இங்கு ஓர் இளைஞர் மிகவும் வித்தியாசமாக, இந்த சக்தி வாய்ந்த ஹயபுசா பக்கை வைத்து பாப் கார்ன் தயாரித்துள்ளார். இதுகுறித்த வீடியோவினை டர்போ எக்ஸ்ட்ரீம் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

வீடியோவில், இந்தி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞர், திடீரென கணினி முன்பிருந்து கிளம்புகிறார். மேலும், சிறிய கப்பினில் சோளத்தையும் உடன் எடுத்துச் செல்கிறார். நேராக ஹயுபுசா பைக்கின் முன்பு சென்ற அவர், அந்த பைக்கின் சைலென்ஸருக்குள், கை நிறைய சோளத்தை அள்ளி போடுகிறார்.

இதைத்தொடர்ந்து, பைக் ஆன் செய்யும் அந்த இளைஞர் சில நிமிடங்கள் காத்திருக்கிறார். அப்போது, சைலென்ஸரின் துளையில் இருந்து பாப் கார்ன்கள் வெளியே பறந்து வந்து விழுகின்றன. இவ்வாறு, பாப் கார்னை தயாரிக்கும் அந்த இந்த காட்சிகள் அனைத்தையும் அவரது செல்போனில் காட்சிப்படுத்துகிறார்.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

மேலும், அவருடன் சில நண்பர்களும், அங்கு வசித்துக்கும் சில சிறுவர்களும் உடன் இருக்கின்றனர். இவ்வாறு பாப் கார்னை தயாரித்த அவர், இது பாப் கார்ன் தயாரிக்க சுலபமான வழி என்கிறார்.

பலர் இதுபோன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை வைத்து சாகசம் செய்யும் இந்த காலக்கட்டத்தில், இந்த இளைஞர் ஹயபுசா பைக்கை வைத்து காமெடி செய்திருக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

அதேசமயம், ஹயபுசா பைக்கை தயாரித்து வரும் சுஸுகி நிறுவனம், அதன் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாடு அடுத்த வருடத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளநிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும்வரை ஹயபுசா விற்பனையில் இருக்கும் என்பது குறிப்பிடித்தக்கது.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

ஹயபுசா பைக்கினை கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, 1999ம் ஆண்டிலேயே விற்பனைக்கும் அறிமுகம் செய்தது. சுஸுகியின் இந்த பைக்கிற்கு உலகளவில் ரசிகர்களும், பெரும் வரவேற்பும் நிலவ ஆரம்பித்தது. ஏனென்றால், இந்த பைக்தான் மணிக்கு 320 கிமீ வேகத்தை எட்டிய, உலகின் முதல் தயாரிப்பு நிலை மாடலாக இருந்தது.

பல லட்சம் மதிப்புள்ள ஹயபுசா பைக்கை வைத்து பாப் கார்ன் செய்த இளைஞர் -வீடியோ!

மேலும், இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் அதிக விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களில் ஒன்றாக ஹயபுசா இருந்து வருகிறது. இந்த பைக்கில் 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் 1,340சிசி 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியாவில் ரூ.13. 5 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Guy Makes A Pop Corn With His Suzuki Hayabusa Bike -Video. Read In Tamil.
Story first published: Monday, April 29, 2019, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X