இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் இந்திய சந்தையிலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

கடந்த 2017ம் ஆண்டு சுஸுகி இன்ட்ரூடெர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்களுக்கு போட்டியாக, மிக குறைவான விலை க்ரூஸர் பைக் தேர்வாக நிலைநிறுத்தப்பட்டது. சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான இன்ட்ரூடெர் வரிசை க்ரூஸர் பைக்குகளின் டிசைன் அம்சங்களுடன் மிக குறைவான சிசி திறன் கொண்ட மாடலாக வந்தது.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

சுஸுகி நிறுவனம் இந்த பைக்கை பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தியது. ஆனால், ஆரம்பம் முதலே இந்த பைக்கிற்கு பெரிய வரவேற்பு இல்லை. இதனால், விற்பனையும் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்ட வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 903 பைக்குகள் விற்பனையான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 74 இன்ட்ரூடெர் 150 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

இதனால், இந்த பைக்கின் உற்பத்தியை சுஸுகி ஏற்கனவே நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இருப்பில் உள்ள பிஎஸ்-4 பைக்குகளை விற்று தீர்க்கும் விதமாக இது கருதப்பட்டது. இதனிடையே, இந்த பைக்கை தொடர்ந்து தக்க வைப்பதில் சுஸுகி நிறுவனத்திற்கு விருப்பமில்லை.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

இதற்கான முதலீட்டுக்கு தக்கவாறு விற்பனை அமைவதும் கடினமாக இருக்கும். விற்பனை சரியாக அமையாவிட்டால், செய்த முதலீடுகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதுடன், உற்பத்திப் பிரிவிற்கும் போதிய வேலையை அளிக்காது. இந்த காரணங்களை வைத்து, சந்தையில் இருந்து இன்ட்ரூடெர் 150 பைக்கை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளும் முடிவில் இருக்கிறது.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

பிற பைக் மாடல்களுக்கான பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 155 சிசி எஞ்சின் சுஸுகி நிறுவனத்தின் வசம் வர இருக்கிறது. அதனை பயன்படுத்த முடியும். ஆனால், அதில் சுஸுகி நிறுவனத்திற்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது. எனவே, மாசு உமிழ்வு விதி அமலுக்கு வருவதற்கு சில மாதங்கள் அவகாசம் இருப்பதால், இதுகுறித்து சுஸுகி விரைவில் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

மேலும், 150 சிசி மாடலுக்கு பதிலாக 250 சிசி எஞ்சினுடன் கூடிய புதிய இன்ட்ரூடெர் பைக் மாடலை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் சுஸுகி வைத்துள்ளது. இந்த புதிய மாடல் மூலமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது.

இன்ட்ரூடெர் 150 பைக் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்?

ஆனால், அதற்கும் எந்தளவு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், சக்திவாய்ந்த மாடலாக இன்ட்ரூடெர் பைக்கை பார்த்து பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குறைந்தது 250 சிசி மாடலாவது சரியாக இருக்கும் என்று சுஸுகி கருதுவதாக தெரிகிறது.

Via- Zigwheels

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2019, 9:18 [IST]
English summary
According to reports, Suzuki Motorcycles is planning to discontinue the Intruder 155 in India due to its poor sales.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+