உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

உலகளவில் ஐந்து கார்களுடன் போட்டிப்போட்ட சுஸுகி நிறுவனம், மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. அவ்வாறு, மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்கிய அந்த கண்காட்சி 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், அவற்றின் புதிய தயாரிப்புகளை அந்த கண்காட்சியில் அறிமுகம் செய்தன.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

இதில், சிறந்த மாடல் கார்களுக்கு பல்வேறு ரீதியான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜெனிவா கார் கண்காட்சியில் கலந்துக்கொண்ட சுஸுகியின் ஜிம்னி எஸ்யூவி மாடல் காருக்கு 2019ம் ஆண்டிற்கான சிறந்த நகர்ப்புற காருக்கான விருது வழங்கப்பட்டடுள்ளது.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

இந்த போட்டியில், ஹூண்டாயின் சேன்ட்ரோ, கியா நிறுவனத்தின் சூல் மற்றும் சுஸுகி ஜிம்னி ஆகியவைக் கலந்துக்கொண்டன. ஆனால், இதில் சுஸுகி நிறுவனத்தின் ஜிம்னி எஸ்யூவி கார் தான் இந்த பட்டத்தை வென்றது. முன்னதாக, ஐந்து கார்களுடன் நடைபெற்ற இப்போட்டியில் இந்த மூன்று கார்கள்தான் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியிருந்தன.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

இந்த விருது வழங்கும் நிகழ்வானது, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. இதில், 2019 வேர்ல்ட் அர்பன் கார் என்ற பட்டத்தை சுஸுகி நிறுவனத்தின் ஜிம்னி காருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு, இந்த ஜிம்னி காரினை 24 நாடுகளைச் சேர்ந்த ஆட்டோத்துறையை மையமாகக் கொண்டும் 86 ஜூரிக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

சுஸுகி நிறுவனத்தின் இந்த ஜிம்னி காம்பேக்ட் 4x4 மாடலின் விலையானது இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சமாக உள்ளது. இந்த ஜிம்னி மாடல் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

இந்த எஸ்யூவி ஜிம்னி மாடலில் நேட்சுரல்லி ஆஸ்பையர்ட் 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 100 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன்கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஆப்ஷனலாக 4 ஸ்பீடு ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

உலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...?

ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவிலும் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. அந்த வகையில், இந்த ஜிம்னி மாடல் வருகின்ற ஜூலை மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரூ.10 முதல் 12 லட்சம் வரையில் விலை நிர்ணயிக்கப்படலாம். ஜிப்ஸி எஸ்யூவி மாடலின் விற்பனை குறைந்ததன் காரணமாக, அதன் விற்பனையை இந்தியாவில் இருந்து சுஸுகி நிறுவனம் விலக்கிக்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2019, 13:26 [IST]
English summary
Suzuki Jimny SUV Wins 2019 World Urban Car Of The Year Award. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+