மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை சுஸுகி கையில் எடுத்துள்ளது.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சுஸுகி விளங்குகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை களமிறக்க சுஸுகி திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

இதற்காக, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோடைப் மாடலை அடுத்த ஆண்டு முதல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்து மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டமானது மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட இருப்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதோஷி உஷிடா கூறுகையில்," மாருதி கார் நிறுவனத்தின் மின்சார வாகன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. இது மட்டுமின்றி, மாருதி சுஸுகியின் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் பயன்படுத்த முடியும்.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

மேலும், மாருதி எலெக்ட்ரிக் கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளையர்களிடமிருந்து நாங்களும் உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கான வாயப்பு உள்ளது. இதுவே எங்களின் மிகப்பெரிய சாதகமான விஷயம்," என்று தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு உடனடியாக உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்க முடியாது என்று சுஸுகி கருதுகிறது. முதல் இரண்டு தலைமுறை வாகனங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாது என்றும் தெரிவிக்கிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததாக மாறுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்!

அண்மையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார வாகனமாக சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை குறிவைத்து காய் நகர்த்த துவங்கி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2019, 13:32 [IST]
English summary
Japanese motorcycle manufacturer Suzuki announced that the company will begin testing electric scooters on Indian roads as soon as next year, but will wait until infrastructure is in place before launching products.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+