அப்பாச்சி பைக்கிற்கு போட்டியாக களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 250: கலக்கத்தில் உள்ள டிவிஎஸ்
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கு போட்டியாக சுஸுகி நிறுவனம் ஜிக்ஸெர் 250சிசி பைக்கினை வரும் மே 20ம் தேதி விற்பனைக்கு களம் இறக்குகிறது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்போர்ட்ஸ் பைக்குகள் தயாரிப்பில் சுஸுகி நிறுவனம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸெர் பைக் இளைஞர்கள் இடையே விற்பனையில் தனியிடம் பிடித்தது. இருப்பினும் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்ஆர் 310, யமஹா நிறுவனத்தின் ஃபேஸர் 250 ஆகிய பைக்குகள் ஜிக்ஸெர் விற்பனையை சரிய வைத்தது. இதனால் சுஸுகி நிறுவனம் கடும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது.

இதனையடுத்து சுஸுகி நிறுவனம் புதிய சுஸுகி பர்க்மேன் 125சிசி ஸ்கூட்டர் அந்நிறுவத்தின் விற்பனை வெற்றியை தேடி தந்தது. இதனையடுத்து சுஸுகி நிறுவனம் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 என்ற பைக்கினை அறிமுகம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சுஸுகி நிறுவனம் மற்றொரு பைக்கையும் தயாரித்து வருவதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது.

அதன்பின்னர் சுஸுகியின் ஜிக்ஸெர் பைக்கிற்கு இளைஞர்கள் இடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சுஸுகி நிறுவனம் பைக்கினை தயாரித்து வருவது உறுதியானது. தனது ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் போட்டி நிறுவனமான யமஹா மற்றும் ஹோண்டா நிறுவனங்களிடம் போட்டியிட சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி களமிறக்கபடுமா என சுஸுகி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

சுசுகி நிறுவனம் புதிய ஜிக்ஸெர் 250சிசி பைக்கினை வரும் மே மாதம் 20ம் தேதி அறிமுகம் செய்கிறது.இந்த செய்தி வெளியானது முதல் சுஸுகி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி பைக்கில் பழைய ஜிக்ஸெர் பைக்கின் சில அம்சங்கள் அப்படியே வரலாம் என எதிரிபார்க்கப்படுகிறது. கூடுதல் அம்சமாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெறலாம் என தெரிகிறது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கின் டிசைனை ஒட்டியே சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி பைக்கும் டிசைன் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் 4 வால்வு என்ஜின் அதிகபட்சமாக 26.5 பிஎச்பி பவரை தருகிறது. மேலும் புதிய ஜிக்ஸெர் 250 சிசி சாம்பல், வெள்ளி மற்றும் நீல நிறத்தில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஜப்பான் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 350, ஹோண்டா சிபிஆர் 250, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மற்றும் யமஹா ஃபேஸர் 250 ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியாக விற்பனைக்கு களம் இறங்குகிறது. புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி பைக் ரூபாய் 1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம் என தெரிகிறது. ஜிக்ஸெர் 250 பைக்கின் வருகையால் டிவிஎஸ், ஹோண்டா மற்றும் யமஹா போன்ற முன்னனி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications








