விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை சரிவால் புலம்பி வரும் நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மட்டும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி வருகிறது.

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

கடந்த ஜனவரி முதல் ஆட்டோமொபைல் துறை அடிசறுக்கிய நிலையில் தத்தளித்து வருகிறது. பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை கணிசமாக குறைந்ததால், பெரும் போராட்ட நிலையில் வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், அவற்றிற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவான்களாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை சரிந்துள்ளது. இந்த நிலையியல், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மட்டும் தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

கடந்த மாதம் 71,631 மோட்டார்சைக்கிள்களை சுஸுகி இந்தியா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதியை உள்ளடக்கிய விற்பனையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

கடந்த மாதத்தில் உள்நாட்டில் மட்டும் 62,752 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக சுஸுகி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த மாத விற்பனையில் 2.2 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

மேலும், கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் 2,98,989 இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 3,46,018 இருசக்கர வாகனங்களை சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன்மூலமாக, 15.72 சதவீத வளர்ச்சியை நடப்பு நிதி ஆண்டில் பதிவு செய்துள்ளது.

MOST READ: உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

கடந்த ஜூன் மாதத்தில் 67,491 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 29.25 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது. அதேபோன்று, கடந்த ஜூலை மாதத்தில் 69,236 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 18 சதவீத விற்பனை வளர்ச்சியை அந்நிறுவனம் பதிவு செய்தது.

MOST READ: உச்சகட்ட எதிர்ப்பில் மோடி: திட்டத்தை செயல்படுத்த முடியாமல் பாஜக கவலை.. மேற்குவங்கத்துடன் இணைந்த மபி

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களையும், சாதாரண ரக பைக் முதல் சூப்பர் பைக் மாடல்களை வரை விற்பனை செய்து வருகிறது.

MOST READ: ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே...

விற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!!

ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக்குகள், க்ரூஸர் பைக்குகள் மற்றும் அட்வென்ச்சர் பைக்குகள் எஎன பல பிரிமீயம் மாடல்களை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பட்ஜெட்டிற்கு தக்கவாறு விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle India Pvt. Ltd. (SMIPL) recently announced its sales figures for the month of August 2019 and there's finally some good news. The two-wheeler manufacturer said it sold 71,631 units, including both domestic sales as well as exports, last month and with also achieved a year-on-year growth of 2.2 per cent for the month of August 2019.
Story first published: Tuesday, September 3, 2019, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more