Just In
- 34 min ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 2 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago
10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...
- 2 hrs ago
"என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!
Don't Miss!
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Movies
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- Finance
1,702 பங்குகள் விலை இறக்கம்..! 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..!
- News
இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Sports
ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்தின் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
டெக்னோ எலெக்ட்ரா நிறுவனம் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெக்னோ எலெக்ட்ரா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக நியோ, ராப்டர் மற்றும் எமெர்ஜ் ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்தின் எமெர்ஜ் ஸ்கூட்டரானது பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் கூடிய ரெட்ரோ கிளாசிஸ் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜருக்கான யுஎஸ்பி போர்ட், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் மோடுகளுடன் வந்துள்ளது.

எமெர்ஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 48V லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 250W BLDC மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணிநேரம் பிடிக்கும். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகும்போது 70 முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

முன்புபறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களுடன் கூடிய சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன.

நியோ மற்றும் ராப்டர் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் வழக்கமான டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ராப்டர் ஸ்கூட்டர் மாடலானது ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரை நினைவூட்டும் டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் லித்தியம் அயான் பேட்டரிக்கு பதிலாக சாதாரண லீட் ஆசிட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, நியோ ஸ்கூட்டரில் நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் மோடுகள் இல்லை.

நியோ மற்றும் ராப்டர் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களிலும் 12V 20AH லீட் ஆசிட் பேட்டரிகள் உள்ளன. எமெர்ஜ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே 250W BLDC மின் மோட்டார்தான் இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றுள்ளது.

நியோ ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 முதல் 65 கிமீ தூரம் வரையில் பயணிக்கலாம். ராப்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியானது 75 முதல் 85 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம், கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அனைத்துமே ஒன்றுதான். டிசைன் மற்றும் பயண தூரத்தில் மட்டுமே வித்தியாசப்படுகினஅறன. ராப்டர் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 19.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ஸ்பேஸ் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு மாடல்களிலும் 12 லிட்டர் கொள்திறன் உள்ள பூட்ஸ்பேஸ் உள்ளது.

புதிய டெக்னோ எலெக்ட்ரா எமெர்ஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.72,247 விலையும், ராப்டர் ஸ்கூட்டருக்கு ரூ.60,771 விலையும், நியோ ஸ்கூட்டருக்கு ரூ.42,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே புனே நகர ஆன்ரோடு விலையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஸ்கூட்டர்களிலுமே 250 வாட்ஸ் திறன் கொண்ட மின்மோட்டார் இருப்பதால் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலேயே இயக்க முடியும். அதேபோன்று, ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசிசயமும் கிடையாது. டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்திற்கு நாடு முழுவதும் தற்போது 50 டீலர்ஷிப்புகள் உள்ளன. விற்பனை மற்றும் சர்வீஸ் வசதிகளை இந்த மையங்கள் மூலமாக வழங்குகிறது.