போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ பைக் ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் ஒன்றை மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வது கவலையளிக்கும் வகையில் உள்ளது. சாலை விபத்துக்களால் அதிகம் உயிரிழப்பது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். இரு சக்கர வாகனங்களை குடிபோதையில் இயக்குவது மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது ஆகிய காரணங்களால்தான் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க காவல் மற்றும் போக்குவரத்து துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் நின்று விடாமல், குடிபோதையில் வாகனங்களை இயக்கும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எதற்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இந்த சூழலில் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தடுப்பதுடன், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதையும் தடுக்கும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றை, பெங்களூரை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது. 4 பேர் அடங்கிய அந்த குழு இந்த பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக ஹெல்மெட் ஒன்றை கண்டறிந்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மிகுந்த இந்த ஹெல்மெட், இரு சக்கர வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

எம்விஜே இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த சாய் வெங்கட், நிகிதா, மேகா மற்றும் சுவ்ரா ஆகிய நான்கு பேரும்தான், இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை கண்டறிந்துள்ளனர். வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆவதை இந்த தொழில்நுட்பம் தடுக்கிறது.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இந்த ஹெல்மெட்டில் சென்சார் ஒன்று இடம்பெற்றுள்ளது. பீரீத்லைசர்களில் (Breathalysers) பயன்படுத்தப்படும் சென்சார்களை போன்றதுதான் இதுவும். இது தவிர டச் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது சென்சார் ரைடரின் சுவாசத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஆல்கஹால் அளவை கண்டுபிடித்து விடும். இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ள டச் சென்சாரானது, ஸ்கின் கான்டாக்ட் மூலமாக ரைடர் உண்மையில் ஹெல்மெட் அணிந்துள்ளாரா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடும். இந்த தகவல்கள் அனைத்தும் ப்ளூடூத் மூலமாக வாகனத்திற்கு கடத்தப்படும்.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இவ்வாறு பெறப்படும் தகவல்களை பொறுத்தே ஸ்டார்ட் ஆகலாமா? அல்லது வேண்டாமா? என்ற உத்தரவு வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்திற்கு கிடைக்கும். ஒருவேளை ரைடர் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இக்னீஷன் சிஸ்டத்திற்கு சிகப்பு கொடிதான் காட்டப்படும். அனைத்தும் சரியாக இருந்தால் பச்சை கொடிதான். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி

இதுபோன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சிரமமான காரியம் எல்லாம் கிடையாது. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் அனைத்தும் சாத்தியமே. ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து இது போன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வந்தால், இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

Source: Deccan Herald

Most Read Articles
English summary
Students Invent Tech To Prevent Bikes From Starting If Rider Is Drunk Or Not Wearing Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X