விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா?

விழாக் காலத்தை முன்னிட்டு டெக்கோ எலெக்ட்ரா நிறுவனம், அதன் மின்சார ஸ்கூட்டர்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் டெக்கோ எலெக்ட்ரா நிறுவனமும் ஒன்று. இது மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை தலைமையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்திய வாகனச் சந்தை மந்த நிலையைச் சந்தித்து வரும் அதே வேலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை தற்போது ஆரம்பநிலையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

ஆகையால், உள் மற்றும் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் மின்சார வாகனங்களை இந்தியாவில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகின்றன.

அந்தவகையில், டெக்கோ எலெக்ட்ரா மின் வாகன உற்பத்தி நிறுவனமும், அதன் தயாரிப்புகளை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

அவ்வாறு, அந்நிறுவனம் மூன்று மாடல் மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கியுள்ளது. அதில், ஆரம்பநிலையில் உள்ள நியோ மாடலுக்கு ரூ. 43,967 என்ற விலையும், நடுத்தர மாடலான ரேப்டருக்கு ரூ. 60,771 என்ற விலையும், டாப் மாடலாக உள்ள எமெர்ஜ்-க்கு ரூ. 72,247 என்ற விலையும் நிர்ணயித்திருந்தது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

டெக்கோ எலெக்ட்ரா நிறுவனம் சந்தைக்கு புதியவர் என்பதால் பெரியளவில் மக்களிடம் பிரபலமடையவில்லை. ஆகையால், வருகின்ற விழாக் காலங்களைக் கருத்தில் கொண்டு அதன் மின்சார வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக, அனைத்து மின்சார ஸ்கூட்டர்களின் விலையையும் கணிசமாக குறைத்துள்ளது.

ஆகையால், டெக்கோ எலெக்ட்ராவின் அனைத்து மின்சார ஸ்கூட்டர்களின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

அந்தவகையில், நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் இருந்து ரூ. 2,410 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 41,557 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. அதேபோன்று, ரெப்டாரின் விலையில் ரூ. 3,348 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அது ரூ. 57,423 என்ற விலைக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது.

தொடர்ந்து, எமெர்ஜ் மாடலின் விலையிலும் 4,141 ரூபாய் குறைக்கப்பட்டு, 68 ஆயிரத்து 106 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

இந்த மூன்று மின்சார ஸ்கூட்டர்களிலும் ஹப் மவுண்டட் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 250 வாட் திறன் கொண்டது.

தொடர்ந்து, ஆரம்பநிலை நியோ மற்றும் நடுத்தர மாடலான ரேப்டர் ஆகிய மாடல்களில் லீட் ஆசிட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எமெர்ஜ் மாடலில் மட்டும் லித்தியன் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

நியோ மற்றும் ரேப்டர் மாடல்களின் பேட்டரி மாறுபட்டிருப்பதால் அவை எமெர்ஜ் மாடலைக் காட்டிலும் அதிக நேரம் முழுமையான எட்ட எடுத்துக் கொள்கின்றது. அவ்வாறு, அவை 100 சதவீத சார்ஜை எட்ட 5 முதல் 7 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன.

ஆனால், லித்தியன் அயன் பேட்டரியைப் பெற்றிருக்கும் எமெர்ஜ் அவ்வாறில்லாமல் வெறும் 4 முதல் 5 மணி நேரங்களிலேயே முழு கொள்ளளவையும் எட்டி விடுகின்றது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

இதில், நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 65 கிமீ தூரம் வரை செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. ஆனால், ரேப்டர் மற்றும் எமெர்ஜின் ரேஞ்ச் நியோவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

அந்தவகையில், ரேப்டர் மற்றும் எமெர்ஜ் மாடல்கள் ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 85 கிமீ தூரம் வரை பயணிக்கின்றது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

பேட்டரி திறனில் மாறுபட்டு காணப்படும் இந்த மின்சார ஸ்கூட்டர்களில் தொழில்நுட்ப வசதி மட்டும் ஒரே மாதிரியானதாக காணப்படுகின்றது. அதேசமயம், பிரேக்கிங் வசதி போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டும் காணப்படுகின்றது.

அந்தவகையில், ரேப்டர் மற்றும் எமெர்ஜ் மாடல்களின் முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக் காணப்படுகின்றது. தொடர்ந்து, ரிவர்ஸ் ஆப்ஷனும் உள்ளது. ஆனால், ஆரம்பநிலை மாடலான நியோவில் டிரம் பிரேக் மட்டும் காட்சியளிக்கின்றது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

அதேசமயம், டெக்கோ எலெக்ட்ராவின் அனைத்து ஸ்கூட்டர்களிலும் எல்இடி மின் விளக்கு, யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது.

உருவத்தில் சற்று மாறுபட்டு காண வேண்டும் டாப் வேரியண்டான எமெர்ஜ்-க்கு ரெட்ரோ கிளாசிக் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், முழுமையான டிஜிட்டல் தரத்திலான எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் இணைக்கப்பட்டுள்ளது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

டெக்கோ எலெக்ட்ரா நிறுவனத்தின் இந்த மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், அதன் டீலர்ஷிப்புகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலக்ட்ரா... புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க இதுவே சரியான நேரம்...

அதன்படி, அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 என பிரித்து மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹீரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மற்றும் ஆம்பையர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2019, 11:28 [IST]
English summary
Techo Electra Electric Scooter Prices Reduced. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+