பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயமாக நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்த அளவிற்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த பிளாட்டினா.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

மகாராஷ்டிர மாநிலம் சடாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத் ஷிண்டே. இவரது தந்தை ஓர் விவசாயி. குழந்தை பருவத்தில் இருந்தே மோட்டார்சைக்கிள்கள் மீது ஜெகன்நாத் ஷிண்டே அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

அத்துடன் மோட்டார்சைக்கிள்களில் நீண்ட தூர டிரிப் அடிப்பது என்பது ஜெகன்நாத் ஷிண்டேவிற்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று. இந்த சூழலில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று (சுதந்திர தினம்), புதிய பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக் ஒன்றை அவர் வாங்கினார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இதன்பின் அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில், பஜாஜ் பிளாட்டினா பைக்கில் தனது முதல் டிரிப்பை அவர் அடித்தார். அப்போது குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் பயணம் மேற்கொண்டார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அதே பிளாட்டினா பைக்கில், லடாக் பகுதிக்கும் கூட ஜெகன்நாத் ஷிண்டே பயணம் மேற்கொண்டார். லடாக் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்தியம் ஆகும்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக லே பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது, மணாலி பகுதியில் வைத்து, ஜெகன்நாத் ஷிண்டே தடுத்து நிறுத்தப்பட்டார். பஜாஜ் பிளாட்டினா பைக்கின் இன்ஜின் கெபாசிட்டி மிகவும் குறைவானது என்பதே இதற்கு காரணமாக இருந்தது.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இதன்பின் லே பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மணாலி துணை கமிஷனரிடம் ஜெகன்நாத் ஷிண்டே வேண்டுகோள் விடுத்தார். இதனால் பயணத்தை தொடர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மற்றொரு ஆச்சரியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள மிக உயரமான கர்டுங் லா சிகரத்திற்கும் இந்த பஜாஜ் பிளாட்டினா பைக் சென்று வந்துள்ளது. அதிக செயல்திறன் வாய்ந்த மோட்டார்சைக்கிள்கள் கூட கர்டுங் லா பகுதியில் திணறலுக்கு ஆளாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இதுகுறித்து ஜெகன்நாத் ஷிண்டே கூறுகையில், ''எனது பஜாஜ் பிளாட்டினா பைக் மிகவும் சௌகரியமாக உள்ளது. எனக்கு இதுவரையிலும் எவ்விதமான அசௌகரியமும் ஏற்பட்டது இல்லை'' என்றார். ஒரு முறை இதே பிளாட்டினா பைக்கில், புனேவில் இருந்து மைசூருக்கு பயணம் செய்துள்ளார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

900 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான இந்த பயணத்தை 18 மணி நேரத்தில் அவர் நிறைவு செய்துள்ளார். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான மைலேஜை ஜெகன்நாத் ஷிண்டேவின் பஜாஜ் பிளாட்டினா வழங்குகிறது.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இதுவே மலை சாலைகள் என்றால் ஒரு லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜ் அவருக்கு கிடைக்கிறது. இந்த நேரத்தில், பஜாஜ் பிளாட்டினா பைக் உடனான தனது சிறந்த தருணங்களையும் ஜெகன்நாத் ஷிண்டே பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

பொதுவாக இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில் சாலைகள் மிகவும் மோசமாகதான் இருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் அந்த சாலைகளில் பயணம் செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட சாலை ஒன்றில், பஜாஜ் பிளாட்டினா பைக்கில் ஒருமுறை ஜெகன்நாத் ஷிண்டே பயணித்தார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

அப்போது பல முறை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனால் பிளாட்டினா பைக் அவரை கைவிடவில்லை. இதன்மூலம் அவர் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தார். அப்போது வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 7 மணி நேரம் ஆனதாக ஜெகன்நாத் ஷிண்டே நினைவு கூர்கிறார்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

ஜெகன்நாத் ஷிண்டேவின் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் பின் பகுதியில் பாக்ஸ் ஒன்று உள்ளது. இதில், நீண்ட தூர பயணங்களின்போது பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது பைக் முழுவதும் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இவை இந்தியாவின் பல்வேறு மூலைகளில் சேகரிக்கப்பட்டவை ஆகும். ஒட்டுமொத்தத்தில் ஜெகன்நாத் ஷிண்டேவின் பஜாஜ் பிளாட்டினா பைக் இதுவரை 2.87 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது! பொதுவாக கார்கள்தான் தனது வாழ்நாளில் பல லட்சம் கிலோ மீட்டர்கள் வரை ஓடும்.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

ஆனால் ஒரு பைக், சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்கள் வரை ஓடியிருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். இத்தனைக்கும் இந்த பைக்கின் இன்ஜின் இன்னும் சிறப்பான நிலையில்தான் உள்ளது. தற்போது வரை இன்ஜினில் எந்த வேலையையும் ஜெகன்நாத் ஷிண்டே செய்யவில்லை.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

ஆனால் இன்ஜின் எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு 4,000 கிலோ மீட்டருக்கும் ஒரு முறை இன்ஜின் ஆயிலை மட்டும் ஜெகன்நாத் ஷிண்டே மாற்றி வருகிறார். அத்துடன் ஜெகன்நாத் ஷிண்டேவின் பைக் கிளட்சும் நல்ல நிலையில் இருக்கிறது.

பெரும் அதிசயம்! இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்

இருந்தபோதும் டயர்கள் மட்டும் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி பைக் வாங்கப்பட்டது முதல் தற்போது வரை முன் பக்க டயர் 6 முறையும், பின் பக்க டயர் 10 முறையும் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக KHOZ INDIA வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஜெகன்நாத் ஷிண்டேவிற்கு மற்றொரு திட்டமும் உள்ளது. தனது பஜாஜ் பிளாட்டினா பைக்கில், மொத்தம் 5 லட்சம் கிலோ மீட்டர்களை நிறைவு செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். வாழ்த்துக்கள் பாஸ்!!!

Most Read Articles
English summary
This Bajaj Platina Covered 2.87 Lakh km. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X