"உன் வாழ்க்கைல 30 லட்சம் ரூபா பைக்க இனி பாக்க முடியுமா" - தமிழக போலீஸாரின் அட்ராசிட்டி..!

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக்கை மடக்கிய தமிழக போலீஸார், அந்த பைக்கின் உரிமையாளர் முன்னிலையிலேயே அட்ராசிட்டி செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கின்றது. இருப்பினும், மேற்கத்திய நாடுகளில் காணப்படுவதைப் போன்ற விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை இங்கு அவ்வளவு எளிதில் பார்க்க முடிவதில்லை. ஆகையால், அவை பொதுசாலையில் தோன்றும்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைகின்றது.

பொதுவாக, இந்தியர்களில் பெரும்பாலானோர் பட்ஜெட் ரக வாகனங்களையே அதிகம் விரும்புகின்றனர். எனவே, சூப்பர் ரக பைக் மற்றும் கார்களைப் பொது சாலையில் பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக இருக்கின்றது.

அத்தகைய வாகனங்கள் சாலையில் தோன்றும்போது, அதனை ஒரு முறையாவது இயக்கி பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காத என பலர் ஏங்குவதுண்டு. இதில், போலீஸார்கள் மட்டும் விதி விலக்கா என்ன..? இதனை விலக்குகின்ற வகையில் தமிழகத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், மதுரையை நோக்கி விலையுயர்ந்த பைக்குகளில் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சாகச பயண விரும்பிகள் என கூறப்படுகின்றது. அந்தவகையில், மதுரையை சுற்றிப் பார்க்க இவர்கள் வந்திருக்கலாம் என தெரிகின்றது. ஆனால், இவர்கள் எதற்காக மதுரை செல்கின்றனர் என்ற உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மதுரைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்விருவரில் ஒருவரை மட்டும் சோதனையிடுவதற்காக மடக்கினர்.

அவர்கள் மடக்கியது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்1200 ஜிஎஸ் மாடல் பைக்காகும். இது இந்தியாவில் ரூ. 22 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்த பைக்கை மடக்கிய போலீஸார், அதனை வியப்புடன் பார்த்ததுடன், ஆவணங்கள் குறித்தும் விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞர் தனது கைப்பேசியில் வைத்திருந்த டிஜிட்டல் ஆவணங்களை காண்பித்தனர். அனைத்து ஆவணங்களையும் முழுமையாக பரிசோதித்த போலீஸார், பைக்கின் விலையைக் கேட்டார், ரூ. 30 லட்சம் என அந்த இளைஞர் கூறவே, அதனை வியப்புடன் பார்த்தனர்.

மேலும், அந்த பைக்கில் அமர்ந்தவாறு ஓர் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அப்போது, மற்றுமொரு போலீஸாரிடம், "உன் வாழ்க்கையில 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்க இனி பார்க்க முடியுமா, நீ போட்டோ எடுத்துக்குறியோ இல்லையோ, நான் எடுத்துக் கொள்கிறேன்" என கூறி இளைஞரின் அனுமதியுடன் பைக்கின்மீது அமர்ந்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த போலீஸார்.

அவரைத் தொடர்ந்து, மற்றுமொரு போலீஸாரும் அந்த பைக்கின்மீது அமர்ந்தவாறு போட்டோ எடுத்துக் கொண்டார். இதுதவிர, அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் சிலரும் பைக்கைக் கண்டு வியந்துபோய் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.

சூப்பர் பைக்குகள் பலரின் வாழ்க்கையில் கனவாகவே இருந்துவிடுகின்றது. ஆகையால், அதை ஓட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை பலர் நழுவவிடுவதில்லை.

தமிழக போலீஸாரின் இந்த வியத்தகு நடவடிக்கைக் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளது. இது, அந்த பைக்கின் உரிமையாளர் அணிந்திருந்த ஹெல்மெட் கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆகும்.

எக்ஸ்-ஷோரூமில் ரூ. 22 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும் இந்த பைக்கில் 1170 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த பைக் மற்ற பைக்குகளைக் காட்டிலும் உருவத்தில் மிகப் பெரியதாக காட்சியளிக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 124 பிஎச்பி சக்தி மற்றும் 125 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது, ஹேட்ச்பேக் ரக கார்கள் வெளியேற்றும் திறனுக்கு இணையானதாகும்.

இந்த எஞ்ஜின் ட்வின் சிலிண்டரைக் கொண்ட மாடலாகும். ஆகையால், ஆஃப் ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான பைக்காக இது இருக்கும்.

இதன்காரணமாகவே நெடுந்தூர பயணத்தை விரும்பும் இளைஞர்கள் சிலர் இதுபோன்ற அதீத திறன் கொண்ட வாகனங்களை தங்களின் நீண்ட தூர பயணத்திற்கு தேர்வு செய்கின்றனர்.

தேவ் திரைப்படத்தில்கூட நடிகர் கார்த்தி தனது காதலியை பார்க்க செல்வதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜிஎஸ் 1200 பைக்கைதான் பயன்படுத்தியிருப்பார்.

Source: RideWithKC/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2019, 15:33 [IST]
English summary
TN Police Stopped BMW Superbike Here Is Why. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+