இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு!
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், எந்த பைக் முன்னணியில் இருக்கின்றது என தெரியுமா...? வாருங்கள் உள்ளே பார்க்கலாம்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹுரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னிலை வகிக்கின்றன. அந்தவகையில், ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஏழு ஆகிய இடங்களை இந்நிறுவனத்தின் பைக்குகளேப் பிடித்துள்ளன.

இதில், 1,78,907 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஸ்பிளெண்டர் பைக் முதல் இடத்தில் இருக்கின்றது. தொடர்ந்து, 94,559 யூனிட்டுகளை விற்பனைச் செய்து எச்எஃப் டீலக்ஸ் இரண்டாவது இடத்திலும், 71,160 யூனிட்டுகளை விற்பனைச் செய்து கிளாமர் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும், ஏழாவது இடத்தில் உள்ள பேஸன் 43,439 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது.

முதல் இரண்டு இடத்தை ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்திருந்தாலும், மூன்றாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பிடித்துள்ளது. அதேபோன்று, கடைசி இடத்தையும் ஹோண்டா நிறுவனத்தின் பைக்தான் பிடித்துள்ளது.

அவ்வாறு, வெறும் 28,250 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்து ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக் பத்தாவது இடத்தில் உள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல், கடந்த ஜீலை மாதத்தில் விற்பனைச் செய்யப்பட்ட பைக்குகளைப் பற்றியதாகும். மேலும், இதுகுறித்த முழுமையான தகவலை பட்டியல் வாயிலாக விரிவாக கீழே காணலாம்.

| வரிசை | மோட்டார்சைக்கிள் | ஜுலை-19 | ஜுலை-18 | சதவீதம் |
| 1 | ஹீரோ ஸ்பிளெண்டர் | 1,78,907 | 2,60,865 | -31.42 |
| 2 | ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் | 1,69,632 | 1,83,694 | -7.66 |
| 3 | ஹோண்டா சிபி ஷைன் | 94,559 | 86,160 | 9.75 |
| 4 | ஹீரோ கிளாமர் | 71,160 | 74,553 | -4.55 |
| 5 | பஜாஜ் பல்சர் | 62,469 | 63,388 | -1.45 |
| 6 | பஜாஜ் பிளாட்டினா | 52,489 | 40,074 | 30.98 |
| 7 | ஹீரோ பேஸன் | 43,439 | 88,354 | -50.84 |
| 8 | பஜாஜ் சிடி 100 | 39,728 | 76,776 | -48.25 |
| 9 | ராயல் என்பீல்டு கிளாசிக் 350 | 29,439 | 44,054 | -33.18 |
| 10 | ஹோண்டா சிபி யூனிகார்ன் | 28,250 | 24,753 | 14.13 |

இந்த பட்டியல் வாயிலாக பார்க்கும்போது, சில பைக்குகள் மட்டும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில், பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் முதல் இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும் 30.98 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, கடந்த ஆண்டு ஜுலை மாதம் 40,074 யூனிட் பிளாட்டினா விற்பனையாகியிருந்தது. ஆனால், நடப்பாண்டிலோ 52,489 யூனிட் பிளாட்டினாக்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக்கும் 14.13 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது, கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 24,753 யூனிட்டுகளையும், நடப்பாண்டு ஜுன் மாதத்தில் 28,250 யூனிட்டுகளின் விற்பனையையும் பெற்றுள்ளது.

இதேபோன்று, அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஹோண்டா சிபி ஷைன் பைக் கடந்த ஆண்டி விற்பனையைக் காட்டிலும் 9.75 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

பெரும்பாலான நிறுவனங்களின் முன்னணி பைக்குகள் விற்பனசை் சரிவைக் கண்டிருக்கும் சூழ்நிலையில் பிளாட்டினா, சிபி யூனிகார்ன் மற்றும் சிபி ஷைன் ஆகிய பைக்குகள் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

முன்னதாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதையடுத்து, இரண்டாம் இடத்தை டிவிஎஸ் ஜுபிடரும், மூன்றாம் இடத்தை சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரும் பிடித்தன.

இதில் கடந்த ஜுலை மாத விற்பனையின்படி, ஆக்டிவா 2,43,604 யூனிட்டுகளையும், ஜுபிடர் 57,731 யூன்டுகளையும், அக்செஸ் 51,498 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்துள்ளது. என்னதான், இந்த ஸ்கூட்டர்கள் முன்னணி இடங்களைப் பிடித்திருந்தாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாத விற்பனையைக் காட்டிலும் குறைவானதாகவே இருக்கின்றன. இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








