இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் விற்பனையாகிய பைக்குகள்குறித்த விவரமாகும்.

நடப்பாண்டு தொடங்கியது முதல் இந்திய வாகனச் சந்தை கடுமையான மந்த நிலையில் சிக்கி தவித்து வந்தது. இதற்கு தற்போதைய விழாக் காலங்கள் தீர்வு ஓர் கொடுத்துள்ளது. இதன்காரணமாக, அண்மைக் காலங்களாக விற்பனை வீழ்ச்சியில் திணறி வந்த வாகனங்கள் உற்பத்தி நிறுவனங்கள், சற்றே பெரு மூச்சு விட ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

இதற்கு, விழாக் காலங்கள் மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுவனங்கள் எடுத்த ஒரு சில தீர்க்கமான முடிவுகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இருப்பினும், ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போதுவரை விற்பனை வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகின்றன.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

அதேசமயம், நாட்டின் முன்னணி இருசக்கர வாகன விற்பனையாளர்களான சுஸுகி மற்றும் ஹோண்ட போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

கடந்த அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 17,15,983 இரு சக்கர வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் இது சற்று குறைவாக காட்சியளிக்கின்றது. அப்போது அதிகபட்சமாக 19,58,565 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

அதேசமயம், வீழ்ச்சிக் காலங்களாக கருதப்பட்டு வந்த செப்டம்பர் மாதத்தில் 16,14,051 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இந்த விற்பனையைக் காட்டிலும் கடந்த அக்டோபர் மாத விற்பனை 6.32 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இதில் எப்போதும் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே தற்போதும் முதல் இடத்தில் இருக்கின்றது. இருப்பினும் முந்தைய கால கட்டத்தில் எட்டிய விற்பனை விகிதத்தை நடப்பாண்டில் பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

அந்தவகையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7,16,059 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப், நடப்பாண்டில் அதிகபட்சமாக 5,99,248 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது. இது கடந்தாண்டு அக்டோபரைக் காட்டிலும் 16.31 சதவீதம் குறைவாகும்.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

இதையடுத்து, இரண்டாவது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிறுவனமும் கடந்த ஆண்டு அக்டோபரைக் காட்டிலும் குறைவான விற்பனையே நடப்பாண்டில் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

அந்தவகையில், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 4,90,124 யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டிருந்தது. ஆனால், நடப்பாண்டிலோ 4,87,782 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதனை மிக் குறைவு என்று கூறிவிட முடியாது. இருப்பினும், கடந்த மாதங்களின் விற்பனை விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகவே கருதப்படுகின்றது.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

அதேசமயம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.99 சதவீதம் விற்பனை வளர்ச்சியை இது பெற்றிருக்கின்றது. தொடர்ச்சியாக இந்த வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, ஹோண்டா நிறுவனம், அதன் தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக முதலில் பிஎஸ்6 தரத்திலான சிபி ஷைன் 125 மாடலை களமிறக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

ஹோண்டாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கின்றது. இது மூன்றாவது இடத்தை தன் வசம் தக்கவைத்துக்கொண்டிருந்தாலும் தற்போது அது கடுமையான விற்பனைச் சரிவில் சிக்கித் தவித்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த வருடம் 3,38,988 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்த டிவிஎஸ், நடப்பாண்டு அக்டோபரில் வெறும் 2,52,684 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது. இது 25.46 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

ஆனால், கடந்த செப்டம்பர் மாத விற்பனையைக் காட்டிலும் இது 3.92 அதிகமாக காணப்படுகின்றது. ஆகையால், டிவிஎஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

நான்காவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருக்கின்றது. 2,42,516 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தை பஜாஜ் பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனமும் கடந்த ஆண்டு அக்டோபரைக் காட்டிலும் குறைவாகவே காட்சியளிக்கின்று.

ஆனால், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 40.55 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. எனவே, பஜாஜ் நிறுவனம் சற்று களிப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

இதையடுத்து, 3.58 சதவீத வீழ்ச்சியுடன் ஐந்தாவது இடத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இருக்கின்றது. கடந்த ஆண்டு 70,044 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்த இந்நிறுவனம், தற்போது 67,538 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. இது, கடந்த செப்டம்பரைக் காட்டிலும் 23.11 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

இந்தியாவில் எந்தெந்த பைக்குகள் அதிகம் விற்பனையாகின்றது என தெரியுமா... புதிய பட்டியல் வெளியீடு!

கடைசியாக, ஆறாவது இடத்தில் சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கின்றது. இது முந்தையக் காலக் கட்டத்தில் பெறாத விற்பனை வளர்ச்சியை தற்போது பெற்று வருகின்றது. அந்தவகையில், ஒட்டு மொத்தமாக கடந்த அக்டோபர் மாதம் 66,215 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. 2018 அக்டோபரைக் காட்டிலும் 7.20 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Top Selling Two Wheeler In India Oct List 2019. Read In Tamil.
Story first published: Monday, November 4, 2019, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X