அம்மம்மா இவ்ளோ விலையா...? பைக்கின் விலையை மிஞ்சும் இந்த சைக்கிளின் விலை...!
பைக்கின் விலையை மிஞ்சும் அளவிற்கு ஐந்து புதிய மாடல் சைக்கிள்களை ட்ரெக் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த ட்ரெக் இந்தியா நிறுவனம் தனது எஃப்எக்ஸ் சீரிஸின் ஐந்து புதிய மாடல் ஹைபிரிட் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. இந்த ஹைபிரிட் சைக்கிள்களின் விலையானது ரூ.32 ஆயிரத்து 199 முதல் 62 ஆயிரத்து 799 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ட்ரெக் எஃப்எக்ஸ் சீரிஸில் எஃப்எக்ஸ்1, எஃப்எக்ஸ்2, எஃப்எக்ஸ்3, எஃப்எக்ஸ்2 டிஸ்க், எஃப்எக்ஸ்3 டிஸ்க் ஆகிய ஐந்த மாடல்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. இதில், எஃப்எக்ஸ்1-ன் விலை 32 ஆயிரத்து 199 ரூபாயும், எஃப்எக்ஸ்2-ன் விலை 36 ஆயிரத்து 299 ரூபாயும், எஃப்எக்ஸ்3-ன் விலை 51 ஆயிரத்து 599 ரூபாயும், எஃப்எக்ஸ்2 டிஸ்க்கின் விலை 42 ஆயிரத்து 399 ரூபாயும், எஃப்எக்ஸ்3 டிஸ்க்கின் விலை 62 ஆயிரத்து 799 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் இருக்கு இந்த சைக்கிளில், இதனை இவ்வளவு பெரிய தொகையில் அறிமுகம் செய்துள்ளார்கள் என்று தானே உங்களுக்கு தோன்றுகிறது. ஆம், எங்களுக்கும் அவ்வாறுதான் முதலில் தோன்றியது. ஆனால், இந்த ஹைபிரிட் சைக்கிளில் சில முக்கிய அம்சங்களும், தொழில்நுட்பங்களும் இணைத்திருப்பதால் இந்த அளவிற்கு விலையை உயர்த்தி விற்பனைச் செய்வதாக ட்ரெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த ஹைபிரிட் சைக்கிள்கள் பயணியின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் ஃபிட்னஸ், பொழுதுபோக்கு மற்றும் ஜாலியான சவாரி ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ட்ரெக்கின் இந்த ஹைபிரிட் சைக்கிள்கள் மிக வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, சைக்கிளின் ஃபிரேம்கள் ஆல்ஃபா கோல்ட் அலுமினியத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கார்பன் போர்க்குகள், ட்யூப்லெஸ்-ரெடி வீல்கள், பஞ்சராகத டயர்கள், ஐசோஜோன் ஜெல் ஹேண்டில் பார் மற்றும் கிரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சைக்கிள் மிகவும் குறைந்த எடையில் இருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க ஏதுவாக இருக்கும். மேலும், நகர் புறங்களில் இந்த சைக்கிளை இயக்கவும் சுலபாக இருக்கும். தொடர்ந்து, ட்ரெக் சைக்கிளில் தொழில்நுட்ப வசதிகளாக ட்யூவோ-ட்ரேப் எனப்படும் இணைப்பு வசதியை ப்ளூடூத் சென்சார்கள் மூலம் இயங்கும் வகையில் சைக்கிளின் ஃபிரேமில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சென்சார்கள், சைக்கிள் எங்கு பயணிக்கிறது என்ற தகவலை பரிமாற உதவும். மேலும், ஃபிட்னஸ் முயற்சிகளை ட்ரேக் செய்யவும் இது உதவும். அவ்வாறு சைக்கிள் வழங்கும் இந்த தரவுகளை ஸ்மார்ட்ஃபோன் அல்லது கணினி மூலம் கண்கானிக்கலாம்.

ஐசோஜோன் ஜெல் ஹேண்டில் பார்கள், சைக்கிள் பள்ளம் மேடு நிறைந்த சாலையில் பயணிக்கும்போது ஏற்படும் அசௌகரியமான அனுபவத்தைக் குறைக்க உதவும். இதேபோன்று, கார்பன் ஃபோர்க்குகள் சைக்கிளுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளாமல், குறைத்து காண்பிக்கும். இது சைக்கிள் ஓட்டிக்குச் சொகுசான அனுபவத்தை வழங்கும்.

ஹைபிரிட் சைக்கிள்களின் அறிமுகம் குறித்து ட்ரெக் மிதிவண்டியின் இந்திய மேலாளர் நவ்நீத் பங்கா கூறியதாவது,
"ட்ரெக் நிறுவனத்தின் எஃப்எக்ஸ் சீரிஸ் சைக்கிள்கள் சாலையில் பல்வேறு கட்ட பரிசோதனைக் உட்படுத்தப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் உங்களது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும். அதேசமயம், உங்களது ஆரோக்கியத்திற்கு எந்த வித தீங்கையும் விளைவிக்காது. இந்த சைக்கிள்களுக்கு வாழ்நாள் வாரண்டி வழங்கி இருக்கிறோம். இதேபோன்று, தொழில்நுட்பம் வாய்ந்த மேலும் சில ஹைபிரிட் சைக்கிள்களை இந்தியச் சந்தையில் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்" என்றார்.

புதிதாக இந்தியாவில் களமிறங்கியுள்ள இந்த ஹைபிரிட் சைக்கிள் தான் இதன் தயாரிப்பில் வெளிவந்துள்ள உயர்தர ஹைபிரிட் சைக்கிள்கள் ஆகும். இது, உலகளாவிய மிகவும் பிரபலமான சைக்கிள்கள். மேலும், இந்த சைக்கிள்கள், சைக்கிள் ஆர்வலர்களிடையே தீரா தாகத்தை ஏற்படுத்திய சைக்கிள்களாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இதன் சிறப்பான தொழில்நுட்பம் பலரை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








