டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

டிரையம்ப் இந்தியா நிறுவனம், அதன் ஸ்க்ராம்ப்ளர் 1200 மாடலின் எக்ஸ்சி வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை ரூ.10.73 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

ஸ்க்ராம்ப்ளர் மாடல் பைக்கிற்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. இதன்காரணமாக டுகாட்டி உட்பட சில நிறுவனங்கள் அதன் ஸ்க்ராம்பளர் ரகத்திலான மோட்டார் சைக்கிள்களை இந்தியச் சந்தையில் களமிறக்கி வருகின்றன. அதனடிப்படையில், டிரையம்ப் நிறுவனமும் தற்போது அதன் ஸ்க்ராம்ப்ளர் 1200 மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

போன்னேவில் ரேஞ்ஜில் இருக்கும் இந்த ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் மாடர்ன் கிளாசிக் லுக் போர்ட்ஃபோலியோவைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம் இந்த பைக் ஆஃப் ரோடு பயணத்திற்கேற்ப உருவாகியிருக்கின்றது. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் சில மாடர்ன் தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கின்றது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

அந்தவகையில், இந்த பைக்கின் ஹெட்லேம்ப், ரியர் லைட், இன்டிகேட்டர் உட்பட அனைத்தும் எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் வண்ண மயத்திலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கால் அலர்ட் மற்றும் நேவிகேஷன் தகவலை பெற முடியும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

அதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளில் கோப்ரோ இன்டெக்ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்தும் வகையில் ஹெண்டில்பார் அருகில் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரைடர் பயணித்துக் கொண்டிருக்கும்போதே புகைப்படம் அல்லது வீடியோக்களை எளிதில் எடுக்க முடியும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

இத்துடன் பாதுகாப்பு வசதியாக டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரக்கிங் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரைட் பை ஒயர் ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கில் ஐந்து ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை, ரோட், ரெயின், ஸ்போர்ட், ஆஃப் ரோடு மற்றும் ரைடர் உள்ளிட்ட மோட்களாக இருக்கின்றன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

இந்த மோட்கள் அனைத்தும் அவற்றின் பெயருக்கு ஏற்ப பயனை அளிக்கும். இவற்றுடன் இந்த பைக்கில் அதீதி பவரை வெளிப்படுத்தும் விதமாக 1200சிசி திறன் கொண்ட ஹை பேரல்லல் ட்வின் மில் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டவை. இத்துடன் இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

டிரையம்ப் ஸ்க்ராம்பளர் 1200 பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷனிற்காக, முன் பக்கத்தில் ஷோவா இன்வெர்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஓஹ்லின்ஸ் ட்வின் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் அட்ஜெஸ்டபில் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு போட்டியாக களமிறங்கிய டிரையம்ப்பின் புதிய மாடல் பைக்...!

இத்துடன், பாதுகாப்பு வசதியாக இந்த மோட்டார்சைக்கிளின் முன்பக்க வீலில் ப்ரெம்போ காலிபருடன் கூடிய 320mm ட்வின் டிஸ்க்கும், பின் பகுதியில் நிஸான் காலிபருடன் கூடிய 235mm சிங்கிள் டிஸ்க் பிரேக்குக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலையானது மற்ற ஸ்க்ராம்பளர் ரக பைக்கிற்கு போட்டி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த பைக் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Triumph Scrambler 1200 Launched In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X