புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுக தேதி விபரம்!
ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்பீடு ட்வின் பைக்கின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

இப்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் சூப்பர் பைக். பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் மிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்திருக்கிறது.

இந்த பைக்கில் ஹெட்லைட்டுகள், இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட்டுகள் என அனைத்துமே எல்இடி விளக்குகளுக்கு மாறி இருக்கிறது. இந்த பைக்கில் புதிய இரட்டை டயல்கள் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதன் மூலமாக, ஏராளமான சிறப்பு வசதிகளை பெற முடியும்.

வண்டியின் வேகம், எரிபொருள் அளவு உள்ளிட்ட வழக்கமான தகவல்களுடன் கூடுதலாக, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தில் மாறுதல்கள் செய்து கொள்ள முடியும். வெப்பப்படுத்தும் கைப்பிடி உறை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கில் 7 ஸ்போக்குகளுடன் கூடிய காஸ்ட் அலுமினிய சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பைரெல்லி கார்ஸா-3 டயர்களும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம். இந்த பைக்கில் முன்சக்கரத்தில் இரண்டு டிஸ்க்குளும், பின்சக்கரத்தில் ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இதன் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சமாக இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று, முன்புறத்தில் கேட்ரிட்ஜ் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இதன் பின்புற ஷாக் அப்சார்பர்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இந்த பைக்கில் 1,200சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பமும், மூன்றுவிதமான நிலைகளில் எஞ்சினை இயக்கும் டிரைவிங் மோடுகளும் உள்ளன.

வெளிநாடுகளில் இந்த புதிய பைக் சில்வர் ஐஸ் - ஸ்டோர்ம் க்ரே, கரோசி ரெட் - ஸ்டோர்ம் க்ரே மற்றும் ஜெட் பிளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிிறது. ஆனால், இந்தியாவில் இந்த மூன்று வண்ணத் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்படுமா என்பது சந்தேகம் உள்ளது.

வரும் 24ந் தேதி இந்த புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100, பிஎம்டபிள்யூ நைன்டி ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.
Source:IAB


Click it and Unblock the Notifications








