ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்!
ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் சூப்பர் பைக்க இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ட்ரையம்ஃப் போனிவில் குடும்பத்தில் 8வது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போனிவில் குடும்பத்தில் உள்ள ஸ்ட்ரீட் ட்வின் அடிப்படையிலான இந்த ஸ்பீடு ட்வின் மாடலானது தோற்றத்தில் முரட்டுத்தனமாகவும், பெரிதாகவும் காட்சி அளிக்கிறது.

இந்த பைக்கில் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கலந்து கட்டிய க்ளாசிக் ரக பைக் மாடலாக வந்துள்ளது. இந்த பைக்கில் இரட்டை குடுவை அமைப்புடைய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 1,200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 96 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின், டிரான்ஸ்மிஷன்தான் ட்ரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் பைக்கிலும் உள்ளது.

ட்ரைம்யஃப் போனிவில் குடும்பத்தில் அதிக செயல்திறன் மிக்க மாடலாக ஸ்பீடு ட்வின் இருக்கிறது. த்ரக்ஸ்டன் ஆர் பைக்கைவிட இந்த பைக் 2.5 கிலோ எடை குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக கூறலாம்.

இந்த பைக்கில் 41 மிமீ கேட்ரிட்ஜ் வகை ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 120 மிமீ ஹைட்ராலிக் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் பிரெம்போ 4 பிஸ்டன் காலிபர்கள் மற்றும் 305 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபருடன் கூடிய 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பைரெல்லி ராஸோ கார்ஸா III டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் எல்இடி இண்டிகேட்டர்கள் உள்ளன. எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சம். அத்துடன் யுஎஸ்பி சார்ஜரும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் சூப்பர் பைக் ரூ.9.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பாரம்பரியம் டிசைனிலான க்ளாசிக் ரக க்ரூஸர் பைக் மாடலை விரும்புவோருக்கு சரியான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








