புதுப்பொலிவுடன் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் அறிமுகம்
புதுப்பொலிவுடன் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் ஹெட்லைட்டில் புதிய அலுமினிய பிராக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் புதுப்பொலிவுடன் கூடிய பெட்ரோல் டேங்க், சைடு பேனல்கள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற இரட்டை வண்ண அலாய் வீல்கள்ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் டிவின் போன்றே, ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த இரு மாடல்களுமே பாரம்பரியத்தை பரைசாற்றும் டிசைன் அம்சங்கள் கொண்ட ட்ரையம்ஃப் போனிவில் குடும்ப வரிசையிலான மாடல்கள்.

எனவே, இந்த இரண்டு பைக்குகளிலுமே 900சிசி பேரலல் ட்வின் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் மெக்னிசியத்தாலான கவர், இலகுவான க்ளட்ச் மற்றும் க்ராங்க்சாஃப்ட்டுடன் வந்துள்ளது. மேலும், முந்தைய மாடல் எஞ்சின் 55 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருந்தது.
ஆனால், தற்போது 65 பிஎச்பி பவரையும், 80 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடல்களில் ரோடு மற்றும் ரெயின் என்ற இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன. டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், எல்சிடி மல்டி ஃபங்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹீட்டட் க்ரிப் கவர்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி, எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.
இந்த இரு மாடல்களிலுமே டயரில் காற்றழுத்தம் குறைவது குறித்து எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதி ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் ரூ.7.45 லட்சம் விலையிலும், ஸ்க்ராம்ப்ளர் மாடல் ரூ.8.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். ட்ரையம்ஃப் போனிவில் வரிசையில் புதிய ஸ்ட்ரீட் ட்வின் மாடல் குறைவான விலை தேர்வாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









