ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

ட்ரான்எக்ஸ் எனப்படும் இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள்குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

சமீப காலமாக இந்தியா மின் வாகன பயன்பாட்டை முழு வீச்சில் ஊக்குவித்து வருகின்றது. இதுதான் தற்போதைய சுற்றுப்புற சூழலின் பாதிப்பை தடுப்பதற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. இதன்காரணமாக, தற்போதைய மத்திய அரசு மின்வாகனங்களுக்கு பல்வேறு சலுகையை அறிவித்து வருகின்றது.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

இது, நம்முடைய நாட்டின் தேவை மட்டுமில்லைங்க, ஒட்டுமொத்த உலகின் தேவையாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன.

இதுபோன்ற காரணங்களால் உள் மற்றும் வெளி நாடுகளில் இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதன் புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிரான்எக்ஸ் நிறுவனம், அதன் புத்தம் புதிய ஸ்கேட்டர் ரகத்திலான இ-ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் பிரத்யேகமாக வாடகை முறையில் இருக்கும் ஷேர்ட் மொபிலிட்டி துறைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

எஃப்டிஎஸ்.02 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 40 கிமீ தூரம் வரை செல்லும். இத்துடன், இந்த இ-ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஐபி67 ரேட்டிங் பெற்றதாகும்.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

அதேபோன்று, ஸ்கூட்டரின் சிறப்பான ஓடும் திறனுக்காக 250W திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், இதனை மூன்று விதமான மோட்கள் மூலம் கட்டுபடுத்திக் கொள்ளவும் முடியும்.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

எஃப்டிஎஸ்.02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இட ஒதுக்கீடு அடிப்படையில், பைலட் பரிசோதனை ஓட்டத்திற்காக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, இந்த மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து அதனை விற்பனைச் செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

இந்த இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள ட்ரான்எக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முன்னதாக வோல்டா மோட்டார்ஸ் என்ற பெயரில் காணப்பட்டது. இது கடந்த 2015ம் ஆண்டே ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்தல் மற்றும் அவற்றை கட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

இந்த நிறுவனம், முன்னதாக இந்தியாவின் முதல் க்ராஸோவர் இ-பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ட்ரான்எக்ஸ் ஒன்று என்று அழைக்கப்படும் அந்த பைக் 2018ம் அறிமுகமானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கூடுதலாக சில மாடல்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஃப்டிஎஸ்.02 இ-ஸ்கூட்டரில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை சேர்த்துள்ளது. அந்தவகையில், ஸ்மார்ட் ஐஓடி லாக், ஜியோ மானிட்டரிங், ரிமோட் மோட்டார் லாக்கிங், நேரடி பேட்டரி ஸ்டேட்டஸ் மற்றும் எல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறுவப்பட்டிருந்தன.

ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...

இத்துடன், பயனர்கள் சௌகரியமான பயண அனுபவத்தை அனுபவிக்கும் வகையில், நீளமான பாதம் வைக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியர்கள் மிகவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2019, 8:30 [IST]
English summary
TronX Launched FTS.02 Electric Scooter In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+