மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!
டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக் மாடல்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறிய மாற்றங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக உள்ளன. இந்த நிலையில், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணையாக டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, அப்பாச்சி ஆர்டிஆர்டி 160 4வி மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஆகிய மூன்று பைக்குகளிலும் விசேஷமான தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படும் நவீன பிரேக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த மூன்று மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, வளைவுகளிலும் ஓட்டுபவர் நம்பிக்கையுடன் பைக்கை கட்டுப்பாட்டுடன் திருப்புவதற்கும், மிக விரைவாக நிறுத்துவதற்கும் உதவும்.

மேலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி பைக்கில் சூப்பர் மோட்டோ என்ற வகை ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளது. மேலும், புதிய ஸ்பீடோமீட்டர் டயல், புதிய இருக்கை அமைப்பு மற்றும் ஹேண்டில் பார் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி பைக்கில் ரேஸ் பைக்குகள் போன்ற புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவும் நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கும்.

தவிரவும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ரேஸ் எடிசன் 2.0 மாடலில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், வேகமாக செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்கும்போது பின்புற சக்கரம் மேலே தூக்காமல் இருப்பதற்கான ரியர் வீல் லிஃப் ஆஃப் புரொடெக்ஷன் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடர்ந்து கிடைக்கும்.

நவீன ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய மாற்றங்களுடன் வந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக் மாடல்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற மாடல்களாக இருக்கும் என்று நம்பலாம்.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் டீலர்களிலும் இந்த மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி வரிசை பைக் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும். புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் மாடல்களின் விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

| டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (சிங்கிள் டிஸ்க் பிரேக்) ஏபிஎஸ் மாடல் | ரூ.85,510 |
| டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் | ரூ.90,978 |
| டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (டிரம் பிரேக்) ஏபிஎஸ் | ரூ.89,785 |
| டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (கார்புரேட்டர் மாடல்) ஏபிஎஸ் | ரூ.1,11,280 |


Click it and Unblock the Notifications








