அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

இருசக்கர வாகன உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் டிவிஎஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த அப்பாச்சி ஆர்ஆர்310 மாடல் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசனை சர்வதேச அரங்கில் அண்மையில் அறிமுகம் செய்தது.

இந்த புதிய மாடல் பைக்கை அந்நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கொலம்பியன் வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

இந்த புத்தம் புதிய ஸ்பெஷல் எடிசன் ஆர்ஆர் 310 பைக், முழுக்க முழுக்க ஸ்போர்ட் பைக் ரகத்தில் தோற்றத்தையும், அம்சத்தையும்ப் பெற்றிருக்கின்றது.

தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிவிஎஸ் அப்பாச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக டிவிஎஸ் நிறுவனம், விரைவில் இந்த ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

புதிய மாற்றமாக ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மேட் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. இத்துடன், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான டிகேல்கள் பைக்கின் முன் பக்கத்தில் துவங்கி பின்பகுதி வரை, அதன் கவர்ச்சியைத் தூண்டிம் வகையில் ஆளுகையைப் பெற்றிருக்கின்றது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இத்துடன் ஆர்ஆர் மாடலை வெளிப்படுத்தும் விதமாக பைக்கின் ப்யூவல் டேங்கில் தொடங்கி ஃபேரிங் குவார்ட் வரை எழுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல நிறுவனங்களின் பெயர் கிராஃபிக்குகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் உருவாக்கத்தில் பங்களித்திருப்பதால் இந்த நடவடிக்கையை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த பிராண்ட் பெயர்கள் ஸ்டைலிங்கில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகின்றது. அவ்வாறு, பங்குதாரர்களின் பதிவு நீக்க, அந்நிறுவனங்கள் செய்த செலவினை டிவிஎஸ் நிறுவனம் பூர்த்தி செய்யவேண்டும். அவ்வாறு, அவை பூர்த்தி செய்யப்படுமேயானால், புதிய ஸ்பெஷல் எடிசனின் விலை மிக அதிகமாக உயர்ந்துவிடும்.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

அதற்கேற்ப வகையில், இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, வெர்டிக்கல்லி ஸ்டேக்கட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் திரை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

இத்துடன், பைக்கரின் பாதுகாப்பான பயணத்திற்காக, பைக்கின் முன்பக்க வீலில் 300 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலிற்கு 240மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் பாதுகப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

முன்னதாக புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் எஞ்ஜினும் சிறியளவிலான மாற்றம் பெற்றதாக கூறப்பட்டு வந்தநிலையில், அதில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பைக்கில் காஸ்மெட்டிக் மாற்றத்தைத் தவிர, வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை காடிவாடி தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

ஆகையால், அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்டாண்டர்டு மாடல் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 312.2 சிசி திறன் எஞ்ஜின்தான் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸின்மூலம் இயங்குகின்றது.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

கொலம்பியா இருசக்கர வாகனச்சந்தையில், டிவிஎஸ் நிறுவத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு அதிகளவு வரவேற்பு நிலவுவதன் காரணமாகவே, அந்நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட் வேரியண்டை முதலில் அங்கு அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ரூ. 2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்திய வருகை குறித்த அறிவிப்பை டிவிஎஸ் நிறுவனம் வெகுவிரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...?

டிவிஎஸ் நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் கூட்டணியில் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளைத் தயாரித்து வருகின்றது. மேலும், இக்கூட்டணியின் அடிப்படையில்தான், ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2019, 15:46 [IST]
English summary
TVS Apache RR 310 Special Edition Launch In India Soon. Read In Tamil.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+