கூடுதல் நிற தேர்வுகளுடன் 2020ல் அறிமுகமாகவுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6...
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது தனித்துவ மாடல் பைக்கான ஆர்ஆர்310 பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து விதங்களிலும் தயாராகிவருகிறது. அதற்கு முன்னதாக தற்போது இந்த பிஎஸ்6 பைக் முக்கியமான பல அப்டேட்களுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது முழுவதும் டிஜிட்டலில் புதிய கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புதிய பெயிண்ட் அமைப்பு இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டிருப்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த வீடியோவின் மூலம், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழக்கம்போல் செங்குத்தான வடிவில் பொருத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் அவற்றில் பட்டன்களும் திரையும் அட்டேட் செய்யப்பட்டுள்ளன.

இதனால் தற்போதைய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை விட இதில் அதிகமான தகவல்களை பெற முடியும். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தவிர்த்து டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310-ல் புதிய ட்யூல் -டோன் க்ரே மற்றும் கருப்பு பெயிண்ட் அமைப்புகளை பெற்றுள்ளது. இதனுடன் சிவப்பு நிறம் சில பாகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றப்படி முந்தைய மாடலின் டிசைனை தான் இந்த பிஎஸ்6 பைக்கும் கொண்டுள்ளது. அதேபோல் எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்கேட்ஸ், ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்லிப்பர்-க்ளட்ச் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் இந்த பைக்கில் வித்தியாசமான கலர் ஸ்கீமை எதிர்பார்க்கலாம். சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் தகவல்களை நேரடியாக பெற கேமிரா தற்காலிகமாக பொருத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பைக்கில் உள்ள 312சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பிஎஸ்6 தரத்தில் இந்த புதிய பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வெளியிடும் ஆற்றல் அளவில் கண்டிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்ற இந்த 2020 ஆர்ஆர்310 பைக் தான் டிவிஎஸ் நிறுவனத்தின் தனித்துவமான பைக்காக விளங்குகிறது. இந்த பிஎஸ்6 பைக் அறிமுகமான பிறகு கேடிஎம் ஆர்சி390, பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் பஜாஜ் டாமினர் 400 போன்ற பைக்குகளுடன் போட்டியிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








