பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

பைக்கில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த வாலிபரால் நேரவிருந்த அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை, பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக நமது இந்திய சாலைகள் உள்ளன. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அதனை உறுதி செய்கின்றன. இந்திய சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

இங்கு சாலைகளில் சுற்றி திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீர் திடீரென வாகனங்களின் குறுக்கே வரும். சில சமயங்களில் மனிதர்களும் கூட. எனவே இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது என்பது எப்போதும் அபாயகரமானதுதான்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கால்நடைகளோ அல்லது மனிதர்களோ குறுக்கே வந்து விட்டால் வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம். கண்ணிமைக்க கூட நேரம் இருக்காது. இதன் காரணமாகதான் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகின்றன.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

என்றாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தொடர்ந்து அதிக வேகத்தில் பறந்து கொண்டேதான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. சாலையில் உடன் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளும் சேர்ந்துதான் பாதிக்கப்படுகின்றனர்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

இருந்தபோதும் பலர் இதனை உணர்ந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த சூழலில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR 310) பைக்கின் திகிலூட்டும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

காண்பவர்கள் நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் உள்ள அந்த வீடியோ, இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானது? என்பதை நமக்கு உணர்த்துகிறது. காலியாக இருந்த தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ''குரூப் ரைடு'' சென்று கொண்டிருந்தனர்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்கள் பயணம் செய்தனர். பெரிய அளவில் வாகன நெரிசல் இன்றி, தேசிய நெடுஞ்சாலை காலியாக இருந்ததால் அவர்கள் அதிவேகத்தில் பைக்கை செலுத்தினர். இதன் உச்சகட்டமாக இளைஞர் ஒருவர் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டினார்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

அவர் ஓட்டியது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ஆகும். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பயணம் செய்தது, பைக்கின் ஸ்பீடோமீட்டரில் தெளிவாக தெரிகிறது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் கிட்டத்தட்ட அவர் ஓவர்டேக் செய்து விட்டார்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

அத்துடன் வேகத்தையும் குறைக்கவில்லை. அப்படியே ''மெயின்டெய்ன்'' செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடப்பதற்காக இடைவெளி விடப்பட்டிருக்கும் பகுதி ஒன்று வந்தது. அந்த இடத்தில் வாகனங்கள் சாலையை கடக்க கூடும்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

என்றாலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டி வந்த இளைஞர் வேகத்தை சற்று கூட குறைக்காமல் அப்படியே பயணம் செய்தார். அந்த நேரத்தில் மற்றொரு பைக்கில் வந்த வாகன ஓட்டி ஒருவர் அந்த இடத்தில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

சாலையை கடப்பதற்கு அவர் சிக்னல் காட்டவில்லை. அத்துடன் இன்டிகேட்டரையும் ''ஆன்'' செய்யவில்லை. சாலையை கடப்பதற்காக திடீரென பைக்கை முன்னோக்கி செலுத்தினார். கொஞ்சம் அசந்திருந்தால் இரு பைக்குகளும் பயங்கரமாக மோதி கொண்டு கோர விபத்து நிகழ்ந்திருக்க கூடும்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

என்றாலும் நல்ல வேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழவில்லை. விபத்தில் இருந்து இரு பைக்குகளும் நூலிழையில் தப்பி விட்டன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை ஓட்டிய இளைஞர், அதிவேகத்தில் பயணித்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

ஆனால் திடீரென இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் குறுக்கே வந்து விட்டார். இதனால்தான் இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. இங்கு யார் வேண்டுமானாலும் திடீர் திடீரென வாகனத்தின் குறுக்கே வரக்கூடும்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

நீங்கள் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது, மற்ற வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது. இது கொடூரமான விபத்திற்கு வழிவகுத்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

இந்த சூழலில் 2 பைக்குகளும் விபத்தில் இருந்து தப்பிக்கும் திக்... திக்... வீடியோவை ரோட் பால்கான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சாலையை திடீரென கடக்க முயன்ற பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தது அனேகமாக பள்ளி மாணவராக இருக்க கூடும். நல்ல வேளையாக அனைவரும் தப்பித்து விட்டனர். இதனிடையே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

இதன் ஒரு பகுதியாக 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS-Anti-lock Braking System) இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பைக்கில் 160 கிமீ வேகத்தால் நேரவிருந்த விபரீதம்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்

இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அத்தியாவசியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
TVS Apache RR310’s Narrow Escape At 160 Kmph Speed: Video Goes Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X