புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

டிவிஎஸ் நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் பாடம் கற்பித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றாக அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR310) இருந்து வருகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிள் மாடலில், 312 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,700 ஆர்பிஎம்மில் 34 எச்பி பவரையும், 7,700 ஆர்பிஎம்மில் 27.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிளில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 வெறும் 2.93 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட 7.17 வினாடிகளை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 எடுத்து கொள்ளும்.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிளின் எடை 169.5 கிலோ. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 180 மிமீ. முதன்மையான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனம் எதிர்பார்க்கும் விற்பனை எண்ணிக்கையை அப்பாச்சி ஆர்ஆர்310 இதுவரை ஈட்டி தரவில்லை.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

இந்த சூழலில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிளின் வருடாந்திர விற்பனை தற்போது 72 சதவீதம் என்கிற அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை தற்போது தெரியவந்துள்ளது.

MOST READ: இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... - வீடியோ!

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

இந்த 31 நாள் கால கட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் வெறும் 279 அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 983 அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிள்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது 72 சதவீத வீழ்ச்சியாகும்.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிள் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காததற்கு அதன் விலை ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிளின் 2019 வேரியண்ட்டின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2,24,348 ரூபாய். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு வாடிக்கையாளர் இதே மோட்டார் சைக்கிளை 2,05,348 ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) வாங்கி விட முடியும்.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

இது ஓரளவிற்கு குறைவான விலைதான் என்றாலும், சராசரி இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? என்பது சந்தேகமே. போதாக்குறைக்கு பஜாஜ் நிறுவனம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார் சைக்கிளை விட குறைவான விலையில் அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த டோமினார் பைக்கை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது.

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

டோமினார் பைக்கின் இன்ஜின் 40 எச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் விலை 1,73,870 ரூபாய் மட்டுமே. அப்டேட் செய்யப்பட்ட புத்தம் புதிய 2019 மாடல் டோமினார் பைக்கை பஜாஜ் நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

MOST READ: இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

புத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்

இந்திய மார்க்கெட் கடும் போட்டி நிறைந்ததாக காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அனைவரும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலையே எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் சோபிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

Most Read Articles

English summary
TVS Apache RR310 Sales Report For March 2019. Read in Tamil
Story first published: Saturday, April 20, 2019, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X