டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ.98,644 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.6,999 கூடுதல் விலையில் வந்துள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி FI பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு டிவிஎஸ் டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த சில வாரங்களில் கார்புரேட்டர் மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் 150 - 160 சிசி ரக பைக் மாடல்களில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி மாடல் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் டபுள் கிராடில் ஸ்பிளிட் சிங்க்ரோ ஸ்டிஃப் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சேஸீயானது டிவிஎஸ் ரேஸிங் அமைப்பின் ஆலோசனைகளின்படி உருவாக்கப்பட்டது.

இந்த பைக்கில் 159.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 16.28 பிஎச்பி பவரையும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் அதிகபட்சமாக 16.56 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் ரகத்தில் மிகச் சிறந்த செயல்திறன் பைக் என்பதைவிட, அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் பைக் மாடலாக கூறலாம். தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறந்தத மாடலாக கூறலாம்.

சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட், யமஹா எஃப்இசட் வி3.0, பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய போட்டியாளர்களுக்கு இணையாக இப்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் வந்துவிட்டதால், முக்கிய தேர்வாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








