பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டில் பல்வேறு மாடல்கள் விற்பனையில் உள்ளன. அப்பாச்சி பிராண்டு பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக, அப்பாச்சி பைக்குகளின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

அதன்படி, அப்பாச்சி வரிசையில் ஆர்டிஆர் 160 4வி மற்றும் 200 4வி ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் பைக் மாடலாக அப்பாச்சி வரிசை வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

அதேபோன்று, ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 20 பிஎச்பி பவரையும், 16.8 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த இரண்டு எஞ்சின்களும் குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

இந்த இரண்டு பைக்குகளிலும் க்ளைடு த்ரூ டிராஃபிக் (ஜிடிடி) என்ற புதிய தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் செல்லும்போது செயல்திறன், எரிபொருள் சிக்கனம் போன்றவற்றை இந்த தொழில்நுட்பம் சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிபுரியும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்குகளில் ஃபெதர் டச் எனப்படும் தொடு உணர் பட்டன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொத்தானை அழுத்தம் கொடுத்து ஸ்டார்ட் செய்ய வேண்டாம். எளிதாக ஸ்டார்ட் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் சைடு மிரர்கள் மற்றும் ரேஸ் பைக்குகளை போன்ற சைலென்சர் சப்தம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் முதல்முறையாக ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் என்ற ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கில் எஞ்சின் அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் போது பின்சக்கரம் தூக்காத வகையிலான ஆர்எல்பி தொழில்நுட்பம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கி சிஸ்டம் மற்றும் ஸ்லிப்பர் க்ளஸ்ட்ச் ஆகிய தொழில்நுட்பங்கள் உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

இரண்டு பைக்குகளிலும் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை நிச்சயம் அதிக மதிப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, ஆர்டிஆர் 200 4வி பைக் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் கிடைக்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரூ.99,950 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.1.24 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இதன் ரகத்தில் பல்வேறு முதன்மையான தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்திருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2019, 10:28 [IST]
English summary
TVS Motor Company has launched the 2020 Apache RTR range in the Indian market. The new TVS Apache RTR models are now compliant with the upcoming BS-VI emission norms of April 2020. The two motorcycles are among the first BS-VI compliant models to roll out from the Hosur-based bike manufacturer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+