பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் அதன் பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை பைக் வாரியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக்குகளில் ஆர்டிஆர்160, ஆர்டிஆர்160 4வி, ஆர்டிஆர்180, ஆர்டிஆர்200 4வி மற்றும் டிவிஎஸ்-ன் பிரதான பைக்கான ஆர்ஆர்310 போன்றவைகளுக்கு பெரியளவில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

மேற்க்கூறப்பட்ட அனைத்து பைக்குகளும் ரூ.19,000 வரை தள்ளுபடியில் இந்த விழா காலத்தில் கிடைக்கவுள்ளன. இந்த பைக்குகள் மேலும், குறைந்தப்பட்ச கட்டணம் செலுத்தும் திட்டத்திற்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதுமட்டுமின்றி 5 வருட ஓன் டேமேஜ்(OD) இன்சூரன்ஸ் பாலிசியையும் டிவிஎஸ் நிறுவனம் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் ரூ.8,800 வரை சேமிக்க முடியும்.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

அப்பாச்சி மாடல்களை தவிர்த்து இந்நிறுவனம், இந்த வருடத்தில் பயணிகள் அதிகம் விரும்பிய மோட்டார் பைக்குகளான ரேடியான் பைக்குகளுக்கும் சில சலுகைகளை வழங்கியுள்ளது. இப்பைக்குகளுக்கான குறைந்தப்பட்ச கட்டணம் செலுத்தும் திட்டம் ரூ.5,999-லிருந்தே ஆரம்பிக்கிறது. மேலும் செயலாக்கத்திற்கு ஜீரோ சதவீத கட்டணத்தால் இந்த ரேடியான் பைக்குகள் எக்ஸ்-ஷோரூம்களில் ரூ.53,815களில் விற்பனையாகவுள்ளது.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

டிவிஎஸ் நிறுவனம், ரேடியான் பைக்குகளின் ஸ்பெஷல் எடிஷன்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. குறைந்த அளவில் வெளியிடப்பட்ட இந்த புது எடிஷன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புது பெயின்ட் அமைப்பில் கிராபிக்ஸ் தோற்ற உடலமைப்பில் என வித்தியாசமான டிசைன்களில் வெளியிடப்பட்டு இருந்தது. இவை எக்ஸ்-ஷோரூம்களில் ரூ.54,665-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

ஆனால் இந்த எடிஷன் பைக்குகளில் இயந்திர பாகங்களை பொறுத்த வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 109.77சிசி சிங்கிள் சிலிண்டர் டுரா-லைஃப் என்ஜினை கொண்டு 7000 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவரையும் 5000 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேனுவலாக 5 நிலை வேகத்திற்கான கியர் பாக்ஸ்களையும் இதன் என்ஜின் கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை கீழுள்ள லிங்கில் காணலாம்...

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

டிவிஎஸ் நிறுவனம் மேலும் பிரபலமான தனது ஜூபிடர் மாடலையும் இந்திய மார்கெட்டில் அப்டேட் செய்துள்ளது. என்டார்க் 125 பைக்கில் வருவது போல் இதில் ப்ளூடூத் இணைப்பு அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரேஸ் எடிஷனும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

பிரபலமான மாடல் பைக்குகளுக்கு விழா கால சலுகைகளை அறிவித்த டிவிஎஸ் நிறுவனம்

இந்த விழா கால சலுகைகளில் மூலம் பார்த்தோமேயானால், டிவிஎஸ் நிறுவனம் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வர போகும் தீபாவளியை முன்னிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெறவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 16:01 [IST]
English summary
TVS Discounts & Festive Season Benefits Announced On Popular Models In India
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+