கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் அறிமுக விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து விற்பனையில் கலக்கி வரும் மாடல் டிவிஎஸ் ஜுபிடர். ஹோண்டா ஆக்டிவா அளவுக்கு விற்பனை இல்லையென்றாலும், இந்த மார்க்கெட்டில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

இந்த நிலையில், புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வருகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டரின் உருவாக்கப்பணிகள் நிறைவடைந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜுபிடர் கிராண்ட் ஸ்கூட்டரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜுபிடர் மாடலிலும் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெறும். அத்துடன் புதிய டிசைனிலான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் 109.7 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்படும் விதத்தில், இதன் எஞ்சினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் சேர்க்கப்பட இருக்கிறது. இதனால், புதிய மாடலின் செயல்திறன், எரிபொருள் சிக்கனம் ஆகியவை மேம்படும். அதேபோன்று, மாசு உமிழ்வு குறையும்.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

இதுதவிர, டிசைனிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட இருக்கிறது. முன்புற அப்ரான் பகுதி மற்றும் பேனல்களில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடல் என்பதற்கான அடையாளமாக இந்த மாற்றங்கள் அவசியமாகிறது.

கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2019, 16:17 [IST]
English summary
TVS motors is working on BS-6 complaint Jupiter scocoter now and it is expeted to launch early next year.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+