ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடலில் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் ஜுபிடரின் கிராண்ட் எடிசனை, அந்த நிறுவனம் சந்தையை விட்டு விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

டிவிஎஸ் நிறுவனம், அதன் ஜுபிடர் ஸ்கூட்டர் வரிசையில் இசட்எக்ஸ் என்ற மாடல் ஸ்கூட்டரை கடந்த 8ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இதனை டரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகிய இரு வேரியண்டில் விற்பனைக்கு களமிறக்கியிருந்தது.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்நிலையில், ஜுபிடர் வரிசையில் ஏற்கனவே விற்பனையில் இருந்துவரும் கிராண்ட் எடிசன் மாடலை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டதாக அந்த நிறுவனம் தகவல் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணைதயளமான என்டிடிவி வெளியிட்டுள்ளது.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

டிவிஎஸ் நிறுவனம், ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலை பல்வேறு பிரிமியம் சிறப்பம்சங்களைக் கொண்ட மாடலாக விற்பனைக் களமிறக்கியது. அந்தவகையில், எல்இடி தரத்தாலான மின் விளக்குகள் மற்றும் அனலாக் உடன்கூடிய மின்னணு திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருந்தன.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

இத்துடன், ஸ்கூட்டருக்கு ராயல் லுக்கை வழங்கும் வகையில், இருக்கைக்கு ப்ரவுன் நிற்திலான லெதர் கவர் வழங்கப்பட்டிருந்தது. மேலும், ஜுபிடர் கிளாசிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிப்பதைப் போன்று, மட்குவார்டில் க்ரோம் பீடிங் இணைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, ஃபுட் போர்ட்டில் பீஜ் நிறத்திலான பிளாஸ்டிக் பேனல்கள் இணைக்கப்பட்டன.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

இத்தகைய சிறப்பு அம்சங்களால் ஜுபிடர் கிராண்ட் மாடல், ஸ்டைலாகவும், ராயலான காட்சியையும் வழங்கியது. ஆனாலும், இதன் விற்பனை மந்தமான சூழ்நிலையையேச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இதனை ரீபிளேஸ் செய்யும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று ஜுபிடர் மாடலில் இசட்எக்ஸ் என்ற புதிய மாடல் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்த ஸ்கூட்டர், ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலை ஒத்ததாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜுபிடர் கிராண்ட் மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களை புதிய ஜுபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமண்டர் உள்ளிட்டைவைப் போன்ற பல்வேறு சிறப்பசம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

அதேசமயம், குறிப்பிட்ட தொழில்நுட்பம் கூடுதலாகவும் புதிய மாடல் ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டிருப்பாதக் கூறப்படுகிறது. இருப்பினும், முந்தைய மாடலில் காணப்பட்ட சில சிறப்பம்சங்கள், புதிய ஜுபிடர் இசட்எக்ஸ் வேரியண்டில் இடம்பெறவில்லை. அந்தவகையில், அலாய் வீல், பேட்டர்ன் லெதர் சீட் கவர் மற்றும் குரோம் ட்ரிம் துண்டுகள் உள்ளிட்டவை தற்போதைய ஜூபிடரில் கொடுக்கப்படவில்லை.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

ஜுபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டரில் 109.7 சிசி திறனை வெளிப்படுத்தும், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8 எச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டவை.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

ப்ளூ மற்றும் ராயல் ஒயின் ஆகிய இரு வண்ண தேர்வில் கிடைக்கும் இந்த ஜுபிடர் இசட்எக்ஸ் மாடல் நேரடியாக ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டருடன் போட்டி போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், டிசைன் மற்றும் விலைகளைப் பெற்றிருக்கின்றது.

ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...!

அந்தவகையில், ஜுபிடர் இசட்எக்ஸ் மாடலின் டிரம் பிரேக் கொண்ட வேரியண்ட் ரூ. 56.093 என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. அதேபோன்று, டிஸ்க் பிரேக் உள்ள வேரியண்ட் ரூ. 58,093 என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2019, 12:35 [IST]
English summary
TVS Discontinues Jupiter Grande Variant — ZX Variant Of Jupiter Gets Updates. Read In Tamil.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+