புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே!

டிவிஎஸ் நிறுவனம், புதிய ஜுபிடர் இசட்எக்ஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள சிறம்பம்சம் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

டிவிஎஸ் நிறுவனம் அதன் ஜுபிடர் இசட்எக்ஸ் மாடல் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது, ட்ரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரு பிரேக் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

இதில், டிரம் பிரேக் கொண்ட வேரியண்ட் ரூ. 56.093 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் உள்ள வேரியண்ட் ரூ. 58,093 என்ற விலையிலும் விற்பனைச் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

மேலும், புதிதாக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள இந்த இந்த வேரியண்ட்களிலும் பாதுகாப்பு வசதிகளாக, கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனை, எஸ்பிடி என அழைக்கப்படுகிறது. இத்துடன், புதிதாக களமிறங்கியிருக்கும் இந்த புதிய மாடல் இசட்எக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

அந்தவகையில், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

முந்தைய மாடலில் இருந்த எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமண்டைக் காட்டிலும் தற்போது பொருத்தப்பட்டிருப்பவை, நவீனத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இத்துடன் அட்ஜெஸ்டபிள் மோனோசாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

இந்த, சிறப்பம்சங்கள் முந்தைய ஜுபிடர் வேரியண்டிலும் காணப்பட்டன. ஆனால், அவை ஹை வேரியண்ட்களில் மட்டும் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்த சிறப்பம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த சிறப்பம்சத்தைப் பெற்றிருந்த ஹை என்ட் வேரியண்ட் ஜுபிடர் அண்மையில் சந்தையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

இதைத்தொடர்ந்தே, புதிய தொழில்நுட்பங்களை ஜூபிடரின் இசட்எக்ஸ் வேரியண்டில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், முந்தைய மாடலில் காணப்பட்ட சில சிறப்பம்சங்கள், புதிய ஜுபிடர் இசட்எக்ஸ் வேரியண்டில் இடம்பெறவில்லை. அவ்வாறு, அலாய் வீல், பேட்டர்ன் சீட் கவர் மற்றும் குரோம் ட்ரிம் துண்டுகள் உள்ளிட்டவை தற்போதைய ஜூபிடரில் கொடுக்கப்படவில்லை.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

இந்த 2019ம் ஆண்டு ஜுபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர் இரண்டு வண்ண தேர்வில் கிடைக்கின்றது. அவ்வாறு, ப்ளூ மற்றும் ராயல் ஒயின் ஆகிய இரு நிறங்களில் புதிய ஜுபிடர் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டரில் 109.7சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8 எச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

இந்த புதிய வெர்ஷன் டிவிஎஸ் ஜுபிடர் நேரடியாக, 110சிசி திறன் கொண்ட ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டருடன் போட்டி போட உள்ளது. அதற்கேற்ப வகையில், அதன் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் அனலாக் சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆக்டிவா 5ஜி, ஜூபிடரைக் காட்டிலும் விலைக் குறைந்த மாடலாக இருக்கின்றது.

புதிய மின் விளக்கு வசதியுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜுபிடர்... விலை மற்றும் ஸ்கூட்டரின் புகைப்படம் உள்ளே....!

தற்போது, ஆக்டிவா 5ஜி ரூ. 54,632 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது. இது ட்ரம் பிரேக் கொண்ட வேரியண்டின் விலையாகும். அதேபோன்று, டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்டின் விலை ரூ. 56.497 ஆக இருக்கின்றது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2019, 13:30 [IST]
English summary
TVS Jupiter ZX Launched. Read In Tamil.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+