ப்ளூடூத் வசதியுடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் அறிமுகம்!
ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புடைய இருசக்கர வாகனங்களை முன்னணி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ரேஸ் பைக்குகளுக்கு நிகரான தரவுகளை பெறுவதற்கான வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு ரூ.1.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த பைக், கார்புரேடர் எஞ்சின் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகமாகியுள்ளது. இந்த மாதத்திற்குள் இந்த பைக் இந்தியாவில் உள்ள அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் சென்றடைந்துவிடும்.

இந்த ப்ளூடூத் வசதியுடன் வந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் இந்தியா முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் பைக்கின் வேகத்தை காட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கண்ட்ரோல் ஸ்விட்ச் மற்றும் தங்க நிறம் பூசப்பட்ட ரேசிங் செயின் போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ப்ளூடூத் வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்க முடியும். இதன்மூலம் பைக்கின் உரிமையாளர் பெட்ரோல் குறைவதையும், பைக்கின் வேகத்தையும், பைக் விபத்திற்குள்ளாவதையும் எஸ்எம்எஸ்/அழைப்புகள் போன்ற அறிவிப்புகளால் தனது மொபைல் போன் மூலமே அறிய முடியும்.

பயண விபரங்கள் மற்றும் வளைவுகளில் பைக் சாய்ந்து திரும்பும்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கண்டறிந்து எச்சரிக்கும் வசதிகளை இந்த ஆப் மூலமாக பெற முடியும். இதுகுறித்து இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டரின் திரையில் எச்சரிக்கையை வழங்கும். மேலும் பைக்கை ஓட்டி முடித்தவுடன் ஒவ்வொரு பயணத்தின்போது பைக் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது, ஓட்டுதல் முறை மற்றும் இதர முக்கிய தரவுவகள் மொபைலுக்கு தகவலாக வந்துவிடும்.

பைக் வேறொருவர் கைக்கு சென்று அந்நேரத்தில் விபத்திற்குள்ளாகியிருந்தால் அந்த விஷயத்தையும் உரிமையாளர் க்ராஷ் அலார்ட் அமைப்பின் மூலமாக அறிந்துவிட முடியும். விபத்து நடந்து 3 நிமிடத்திற்குள்ளேயே பைக்கை ஓட்டி சென்றவரின் அலைபேசி எண் மற்றும் பைக் விபத்திற்குள்ளான இடத்தின் முகவரி போன்றவையும் உரிமையாளருக்கு குறுந்தகவலாக வந்து சேர்ந்துவிடும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என்ஜினில் முந்தைய மாடலில் இருந்து எந்தவொரு மாற்றமும் செய்யபடாமல், அதே 197.75சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலமாக 8,500 ஆர்பிஎம்மில் அதிகப்பட்ச பவராக 20.5 பிஎஸ்ஸையும் 7,000 ஆர்பிஎம்மில் 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இதன் என்ஜினுடன் ஐந்து-வேக டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

வரும் விழாகாலத்திற்காக அப்பாச்சியின் மற்ற மாடல்களான ஜூபிடர், என்டார்க், ரேடியான் போன்றவற்றை விட சிறந்த சலுகைகளை டிவிஎஸ் நிறுவனம் இந்த அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மாடலிற்கு அறிவித்துள்ளது. ஜூபிடர் கிராண்ட் 110 மாடல் மட்டுமே கடந்த மாதத்தில் ப்ளூடூத் இணைப்புடன் வெளியாகியிருந்தது. பிறகு சில வாரங்களுக்கு முன்பு என்டார்க் மாடலின் ரேஸ் எடிசன் இதே ப்ளூடூத் இணைப்புடன் ரூ.62,995க்கு வெளியானது.

2020ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனம் தனது அடுத்தடுத்த தயாரிப்பு வாகனங்களை காண்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் டிவிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய அறிமுகம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும்.


Click it and Unblock the Notifications








