அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

அசத்தலான புதிய அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதனை உறுதிசெய்யும் விதத்தில் புதிய டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் 125 சிசி ரகத்தில் சிறந்த மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் வருகை மற்றும் ஹோண்டா க்ரேஸியா, சுஸுகி அக்செஸ் 125 ஆகிய போட்டியாளர்களால் நெருக்கடியும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும் என்டார்க் 125 ஸ்கூட்டரை மேம்படுத்தி உள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய என்டார்க் 125 ஸ்கூட்டரின் டீசரை டிவிஎஸ் வெளியிட்டு இருக்கிறது.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

டீசரில் முக்கிய அம்சமாக ஹெட்லைட்டில் ஹாலஜன் பல்புகளுக்கு பதிலாக எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் மிகச் சிறப்பான பார்வை திறனை வழங்கும். பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டர் போன்ற வடிவிலான T வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் முன்புறத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், முன்புற வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் அண்மையில் மேட் சில்வர் ஃபினிஷ் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கருப்பு வண்ணத் தேர்வு உள்பட புதிய வண்ணத் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.7 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.27 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது பிஎஸ்-4 எஞ்சின்தான் தக்க வைக்கப்படும். அடுத்த ஆண்டுதான் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய புதிய மாடல் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அசத்தலான அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் அனைத்து விதத்திலும் மதிப்பு வாய்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய மாடல் சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2019, 12:31 [IST]
English summary
The TVS NTorque 125 facelift has been teased by TVS Motor Company. On the official instagram, twitter and facebook accounts of the TVS NTorq, TVS Motor Company has put up a short teaser of the TVS NTorq 125 facelift.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+