ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் 125 சிசி ரக ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மிரட்டலான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சரியான விலை போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மிக குறுகிய காலத்தில் இந்த ஸ்கூட்டர் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் ஏராளமான விருதுகளையும், மதிப்புமிக்க பல கவுரவ பட்டங்களையும் பெற்றுள்ளது. ஆண்டின் சிறந்த ஸ்கூட்டருக்கான விருதையும் டிவிஎஸ் என்டார்க் 125 பெற்றது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர் விருது பெற்றதை குறிக்கும் வகையில், முன்புற அப்ரான் பேனலில் விசேஷ பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த சிறப்பு பதிப்பு மாடலானது புதிய சில்வர் வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் எடிசன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இந்த ஸ்கூட்டரின் பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மிகவும் வசீகரமாக உள்ளது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதனுடன் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும். நேவிகேஷன் வசதியையும் வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் மொபைல் யுஎஸ்பி சார்ஜர், எல்இடி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருக்கையும் மிக சொகுசாகவும், போதிய இடவசதியை அளிக்கும் விதத்தில் உள்ளது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் 124.7 சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 9.2 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்கூட்டர் செயல்திறனில் சிறப்பான மாடலாக மதிப்பை பெற்றுள்ளது.

ஸ்பெஷலான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு மாடலுக்கு ரூ.59,995 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சுஸுகி ஆக்செஸ், ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ டெஸ்ட்டினி உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2019, 10:36 [IST]
English summary
TVS Motor Company has launched the Ntorq 125 Scooter Of The Year edition with a new colour. The scooter is now available in a Silver paint job and also sports the 'Scooter Of The Year' emblem.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+